
கருணாநிதியுடன் "முதல் சந்திப்பு"....மனம் திறந்த குஷ்பூ...!
நடிகை குஷ்பூ கருணாநிதி மீது அதிக பற்று மரியாதை கொண்டவர். கருணாநிதி மறைந்த பிறகு அவரை சந்தித்த போது நடந்த சில சம்பவங்களை தனியார் பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது, கருணாநிதியுடனான முதல் சந்திப்பு 1991 ஆம் ஆண்டு நிகழ்ந்ததாகவும், அப்போதுதான் சின்ன தம்பி திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்து உள்ளார்
அப்போது தமிழ் பேச தெரியாத அவர், தமிழ் படங்களில் நடிக்க சற்று சிரமம் அடைந்துள்ளார். இந்த தருணத்தில், 1991 ஆம் ஆண்டு, "சென்னை ஈரோடு செல்லும் ரயிலில் கலைஞரை சந்தித்த போது, நடிப்பு எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு மொழியும் முக்கியம்....என கலைஞர் தெரிவித்தாக உணர்ச்சி பொங்க கூறி உள்ளார்
காவேரி மருத்துவமனையில் கலைஞர் இருக்கும் போது அனைத்து கட்சி தலைவர்களும் தொண்டர்களும் அவரை வந்து பார்த்தனர்...என்றும் அவருக்கு நிகர் அவரே தான் என கலைஞரை பற்றி நடிகை குஷ்பூ தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.