ஒருவழியாக விக்ரம் படப்பிடிப்பு நிறைவு.. கமலுடன் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..

Kanmani P   | Asianet News
Published : Feb 26, 2022, 02:13 PM IST
ஒருவழியாக விக்ரம் படப்பிடிப்பு  நிறைவு.. கமலுடன் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..

சுருக்கம்

கமலின் விக்ரம் பல இடையூறுகளுக்கு பிறகு ஒரு வழியாக முடிந்துள்ளது..நிறைவு நாளை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்...

மாநகரம்  படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே முத்திரை பதித்து, தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக உயர்ந்தார். இதையடுத்து கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கைதி திரைப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. 

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதன்முலம் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த லோகேஷ் கனகராஜ், தற்போது கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்துள்ளார். 'விக்ரம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிவானி, மகேஷ்வரி, மைனா நந்தினி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதிரடி ஆக்சன் படமாக இது தயாராகி வருவதால், வில்லன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். அதன்படி இப்படத்தில் 7 வில்லன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாம்.

விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் மெயின் வில்லனாக நடித்து வரும் நிலையில், சம்பத்ராம், செம்பன் வினோத், டெல்லி கணேஷின் மகன் மகாதேவன், மைம் புகழ் கோகுல்நாத், மெர்சல் பட வில்லன் ஹாரிஸ் பெராடி ஆகியோர் துணை வில்லன்களாக வந்து மிரட்ட உள்ளார்களாம். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது..

இதையொட்டி கமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழு பெரிய சைஸ் கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளனர்...இந்த வீடியோ வைரலாகி வருகிறது.. 

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்