
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அதிக படங்கள் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தவர். 30 வயதை கடந்த நடிகையாக இருந்தாலும், இவரின் அழகு மற்றும் கவர்ச்சி காரணமாக அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.
சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை இவர் கடந்த 2020ம் ஆண்டு ஆண்டு, அக்டோபர் மாதம், பெற்றோர்கள் சம்மதத்துடன் மும்பையில் உள்ள பெரிய மாலில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு கமிட்டான சில படங்களில் நடித்துவந்த காஜல் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.
கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிக்காமல் இருந்து வரும் காஜல், வழக்கம்போல் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார். மேலும், குறையாத காதலுடன் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
சமீபத்தில் காஜல் அகர்வாலின் வளைகாப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது..இது தொடர்பான வீடியோ வைரலானது..இந்நிலையில் குட்டி பேபி பெல்லியுடன் காஜல் மெல்லிய நடனம் ஆடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்..இது வைரலாகி வருகிறது...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.