
வாலு இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் தமன்னா நடிக்கும் ''ஸ்கெட்ச்'' கலைப்புலி S.தாணுவின் 'V' கிரியேசன்ஸ் வழங்க மூவி பிரேம் பட நிறுவனம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது.
மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவிகிஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
''ஸ்கெட்ச்'' படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டது. முப்பது நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வட சென்னையை பிண்ணனியாகக் கொண்டு உருவாகும் இந்த படம் புது மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தும்.
வட சென்னையை பற்றி ஏற்கனவே சொன்ன படங்கள் எல்லாம் அவர்கள் படிப்பறிவு இல்லாத பாமரர்கள், ஏழைகள் என்று தான் கூறி உள்ளன. வட சென்னையில் படித்த டாக்டர்கள் , வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களும் இருக்கிறார்கள் என்கிற ஸ்டைலிஷ் ஆன படமாக ஸ்கெட்ச் உருவாகி வருகிறது. பரபரப்பான ஆக்ஷன் படமாக ஸ்கெட்ச் உருவாகுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.