'விக்ரம் 58 ' படத்தில் பிரியா பவானி இடத்தை பிடித்த பிளாக் பஸ்டர் பட நடிகை..!

Published : Oct 17, 2019, 04:54 PM IST
'விக்ரம் 58 ' படத்தில் பிரியா பவானி இடத்தை பிடித்த பிளாக் பஸ்டர் பட நடிகை..!

சுருக்கம்

'டிமான்டி காலனி',  'இமைக்காநொடிகள்', ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்ததாக நடிகர் சியான் விக்ரம் நடிக்கவுள்ள 58 வது, படத்தை இயக்கவுள்ளார்.  இந்த படத்தில் விக்ரம் ஒன்றுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கவுள்ளார்.  

'டிமான்டி காலனி',  'இமைக்காநொடிகள்', ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்ததாக நடிகர் சியான் விக்ரம் நடிக்கவுள்ள 58 வது, படத்தை இயக்கவுள்ளார்.  இந்த படத்தில் விக்ரம் ஒன்றுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை பிரியா பவானி சங்கர் டேட் பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக புதிய ஹீரோயினாக நடிகை ஸ்ரீநிதி செட்டியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுகுறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்ரீநிதி ஷெட்டி, கடந்த வருடம் தெலுங்கில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான' 'கேஜிஎஃப்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இந்த படத்தில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை வியாகாம் 18 பிக்சர்ஸ் நிறுவகணம் தயாரிக்கிறது.  இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Jana Nayagan Full Review : விஜய்யின் கடைசி படம் ஒர்த்தா?... ஒர்த் இல்லையா? ஜனநாயகன் முழு விமர்சனம் இதோ
Jana Nayagan Viral Videos : படம் பார்க்க வந்த த்ரிஷா..கண்ணீர் விட்டு அழுத அமைச்சர்! வீடியோ உள்ளே!