தடையில் இருந்து தப்பிய விஜய்சேதுபதி படம்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 14, 2020, 7:27 PM IST
Highlights

மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப்  என்ற நிறுவனத்திடம் வாங்கியதாகவும் எனவே உரிய விநியோக உரிமை தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. 

இயக்குனர் சீனு ராமசாமி  இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி,நடிகை காயத்ரி நடித்த   'மாமனிதன்' திரைப்படம்,இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு முதன் முறையாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஒன்றாகை இணைந்து இசை அமைத்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கில் மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப்  என்ற நிறுவனத்திடம் வாங்கியதாகவும் எனவே உரிய விநியோக உரிமை தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார். 

 

இதையும் படிங்க: விஜே சித்ரா தற்கொலை... போலீசாரிடம் ஹேமந்த் அளித்த அதிர்ச்சி தகவல்கள்...!

இந்த நிலையில் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை என்றும்  அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் எனவே படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி
மனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதனால் விரைவில் படக்குழு ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 
 

click me!