சாயிஷவுடன் போர்ச்சுக்கல் பறந்த விஜய் சேதுபதி - வெடித்தது சர்ச்சை...!

Asianet News Tamil  
Published : Mar 25, 2018, 06:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
சாயிஷவுடன் போர்ச்சுக்கல் பறந்த விஜய் சேதுபதி - வெடித்தது சர்ச்சை...!

சுருக்கம்

vijaysethupathi and sayisha kaleegal participate in shooting

சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் காரணமாக கடந்த 16-ந் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. என்றாலும், ஏற்கனவே செட் போட்டு படப்பிடிப்பு நடத்திய விஜய் படம் உள்பட 4 படங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

இதற்கான விளக்கத்தையும் தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ் தெரிவித்தார். 23-ந் தேதி (இன்று) முதல் வெளியூர், வெளிநாட்டு படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஜுங்கா’ படப்பிடிப்புக்காக அந்த படக்குழுவினர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்று இருக்கிறார்கள். 

போர்ச்சிக்கலில் நடைபெற உள்ள படபிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி, சாயிஷா, இயக்குனர் கோகுல் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். போர்ச்சுக்கல் நாட்டில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர்.

இருப்பினும் வேலை நிறுத்தம் நடைபெறும் நேரத்தில் ‘ஜுங்கா’ படக்குழுவினர் படப்பிடிப்புக்காக போர்ச்சுக்கல் சென்று இருப்பது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. ஏற்கனவே, குறிப்பிட்ட தேதியில் போர்ச்சுக்கல் செல்ல விமான டிக்கெட், படப்பிடிப்பு அனுமதி ஆகியவை பெறப்பட்டு இருப்பதால் இந்த படக்குழு புறப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் ஹாட்ரிக் ஹிட்! ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன தனுஷ் - 2026-ல் காத்திருக்கும் மெகா பிளான்கள்!
ரசிகர்களுக்கு செம ட்ரீட்! 'ஸ்பிரிட்' படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!