பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய லேட்டஸ்ட் பிரமோவில் பாலாஜி, மும்தாஜ்,டேனி மற்றும் விஜயலஷ்மி ஆகியோர் பிக் பாஸ் வீட்டின் சக போட்டியாளர்கள் குறித்து பேசி கொள்கின்றனர். இதில் பாலாஜி சென்றாயனை கிண்டல் செய்கிறார். அதற்கு ஏற்றார் போலவே கண்ணாடிவழியாக எட்டி பார்ப்பது என சென்றாயனின் நடவடிக்கைகளும் வேடிக்கையாக இருக்கிறது.

தொடந்து இந்த பிரமோவில் இடம் பெற்றிருக்கும் காட்சிகளில் மும்தாஜ் பிற போட்டியாளர்கள் குறித்து விஜயலஷ்மியிடம் கூறிக்கொண்டிருக்கிறார். டாஸ்க்னு வந்துட்டா அவங்க ரொம்ப சீரியசா ஆகிடுவாங்க. என்ன தள்ளிவிட்டுட்டு கூட போயிடுவாங்க என கூறி விஜியை எச்சரிக்கை செய்கிறார்.
undefined
அவர் மஹத் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா குறித்து தான் கூறுகிறார் என பார்க்கும் போதே தெரிகிறது.
வெளியில் இருந்து பிக் பாஸை பார்த்துவிட்டு வந்திருக்கும் விஜலஷ்மிக்கு மும்தாஜ் இவற்றை கூற வேண்டிய அவசியமே இல்லை. பிக் பாஸ் வீட்டில் யார் யார் எப்படி என அவருக்கு நன்றாக தெரியும் என்பது போல நடந்து கொள்கிறார் விஜயலஷ்மி.
நீங்க போடுற சண்டை உண்மையா இல்லை. மனசில கோபம் வந்து சண்டை போட்டிருந்தா மறுபடி எப்படி உடனே போய் உங்களால கட்டி பிடிச்சு மன்னிப்பு கேட்க முடியும். இது ரொம்ப நடிப்பு மாதிரி தெரியுது. மக்களால இதை எல்லாம் நம்ப முடியாது என கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டை பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை இங்கு யாரிடமும் சொல்ல கூடாது எனும் ரூல் தெரிந்தும் விஜி இப்படி பேசுகிறார் என்றால் அது பிக் பாஸின் அனுமதியோடு தானோ எனும் சந்தேகம் வேறு இதனால் எழுந்திருக்கிறது. விஜியின் இந்த அறிவுரைக்கு பிறகு பிக்பாஸில் சண்டை போட்ட அடுத்த நிமிஷம் கட்டிபிடித்து மன்னிப்பு கேட்கும் சம்பவங்கள் நடக்குமா? எனும் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது இந்த பிரமோ.