
தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்தின், பிறந்தநாளுக்கு அவரின் மகன்கள், விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் இணைந்து தந்தைக்கு பிறந்த நாள் பரிசாக பிஎம்டபிள்யூ காரை வாங்கி கொடுத்துள்ளனர். கேப்டனும் மகன்களின் அன்பு பரிசை கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் விழா, இன்று அவருடைய கட்சி தொண்டர்களாலும், ரசிகர்களாலும், கோலாகலமாக கொண்டாட பட்டு வருகிறது. மேலும் கட்சி சார்பாக பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் சார்பாக, பல நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் வழங்கினர். குறிப்பாக 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
மேலும் தொண்டர்களுக்கு இனிப்பு கொடுத்து, அவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடினார் கேப்டன்.
இந்நிலையில், தந்தைக்காக விஜயகாந்தின் மகன்கள், விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன், இருவரும் இணைந்து விலை உயர்ந்த கார்களில் ஒன்றான 'பிஎம்டபிள்யூ' காரை பரிசாக கொடுத்துள்ளனர். மகன்கள் ஆசையாக கொடுத்த பரிசை விஜயகாந்த் கண்ணீர் மல்க பெற்று கொண்டு. கட்டி பிடித்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினர். இந்த கார் தற்போது மாலை அணிவிக்கப்பட்டு தேமுதிக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் சமீப காலமாக , கடன் பிரச்சனைகளில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், கடன் இருந்தாலும் பரவாயில்லை தங்களுடைய தந்தையின் சந்தோஷம் தான் முக்கியம் என மகன்கள் விலை உயர்ந்த இந்த பரிசின் மூலம் நிரூபித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.