‘96’ செம ஹிட் கொடுத்த டைரக்டருக்கு பரிசு …. அசத்திய விஜய் சேதுபதி!

Published : Feb 06, 2019, 08:09 AM IST
‘96’ செம ஹிட் கொடுத்த டைரக்டருக்கு  பரிசு …. அசத்திய  விஜய் சேதுபதி!

சுருக்கம்

96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமாருக்கு, புல்லட் ஒன்றைப் பரிசாக அளித்து அசத்தியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. அந்த புல்லட்டுக்கு 0096 என்ற பதிவெண்ணையும் வாங்கிக் கொடுத்து பிரேம் குமாருக்கு ஆனந்த அதிர்ச்சி அளித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்தார்.

பள்ளிக்கால காதலைப் பற்றிய இந்தப் படம், காதலர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எனவே, இந்தப் படத்தைத் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்கின்றனர். கன்னடத்தில் ‘99’ என்ற பெயரில் இந்தப் படம் தயாராகி வருகிறது. கோல்டன் ஸ்டார் கணேஷ், பாவனா நடிக்கின்றனர்.


தெலுங்கில் நானி மற்றும் சமந்தா நடிக்கின்றனர். தமிழில் இயக்கிய பிரேம்குமாரே தெலுங்கிலும் இயக்குகிறார். இப்படி பெரிய அளவில் இந்தப் படம் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் பிரேம்குமாருக்கு புல்லட் ஒன்றைப் பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் விஜய் சேதுபதி. மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த புல்லட்டின் விலை 3 லட்ச ரூபாய். இன்னொரு இன்ப அதிர்ச்சியாக, இந்த புல்லட்டுக்கு 0096 என்ற பதிவு எண்ணையும் வாங்கிக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி

ஒரு படம் வெற்றியடைந்தால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அல்லது ஹீரோ, இயக்குநருக்கு கார் பரிசளிப்பது தமிழ் சினிமாவில் வழக்கம். ஆனால், வித்தியாசமாக புல்லட் வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார் விஜய் சேதுபதி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜாடைமாடையாக பேசி வம்பிழுத்த அருணை அடிவெளுத்த முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் சீரியலை இழுத்து மூடும் சன் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்