
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், காமெடி நிகழ்ச்சிகள் என ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அப்படி ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் விளங்குகிறது. இந்த ஷோவில் பங்கேற்றதன் மூலமாக செந்தில், ராஜலெட்சுமி, பிரகதி உள்ளிட்ட பலரும் திரையுலகில் முன்னணி பாடகர்களாக வலம் வருகின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சிவாங்கி தான் தற்போது ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி’ மூலமாக ரசிகர்களின் செல்லக்குட்டியாக மாறியுள்ளார்.
இப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராக வெற்றி பெறவில்லை என்றாலும், ஏராளமான ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் செளந்தர்யா. இவர் விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் என்ன ஸ்பெஷல் விஷயம் என்றாலும் பாடல் பாடி அசத்துவார்.
இதையும் படிங்க: ரஜினியை அடுத்து சிரஞ்சீவிக்குமா?... ஓ.கே. சொல்லுவாரா கீர்த்தி சுரேஷ்...!
இந்நிலையில் செளந்தர்யா தன்னுடைய உடல் நிலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செளந்தர்யாவிற்கு தீடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த சனிக்கிழமை எமர்ஜென்சியாக அக்யூட் அப்பன்டிசைட்டிஸ் என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், உடல் நலம் தேறி வர சிறிது காலம் ஆகும். எனவே எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் செளந்தர்யா பூரண நலம் பெற வேண்டுமென பிரார்த்திப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.