பிக் பாஸ் நிகழ்ச்சியால் பரிதாபம்... பேரதிர்ச்சியில் விஜய் டிவி..!

Published : Oct 05, 2019, 11:33 AM ISTUpdated : Oct 05, 2019, 01:52 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சியால் பரிதாபம்...  பேரதிர்ச்சியில் விஜய் டிவி..!

சுருக்கம்

விஜய் டிவியில்  கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் -3  நிகழ்ச்சி 103 நாட்களை கடந்து நாளை இறுதி கட்டத்துக்கு செல்லும் நிலையில் நிகழ்ச்சி நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 

கடந்த இரண்டு சீசன்களை போலவே தற்போது நடைபெற்று வரும் சீசன் 3 நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. கடந்த இரண்டு சீசனை விட தற்போது பங்கேற்கும் போட்டியாளர்கள் மீது சர்ச்சைகள் அதிகம். பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் போட்டியிலிருந்து வெளியேறியது நிகழ்ச்சி பார்வையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்தனர். 

நெடுங்காலமாக சன் டிவி, விஜய் டிவி மட்டுமே பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கோலோச்சி வந்தது. இப்போது நிலவரம் வேறு. சன் டிவி, விஜய் டிவிகளுக்கு போட்டியாக இப்போது ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், பாலிமர் என பல சேனல்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. சின்னத்திரை சேனல்களில் மக்களை கவரும் நிகழ்ச்சிகளை வைத்து தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தவே போட்டி போடுகின்றன.

 இந்த நிலையில் கடந்த இரண்டு சீசன்களை விட சீசன் 3 மக்களிடையே குறைந்தளவு வரவேற்பை பெற்று டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்துள்ளது விஜய் டிவியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.  கமல் தோன்றும் வார இறுதி நாளான சனி, ஞாயிறு கிழமைகளில் கூட மற்ற சேனல்களை விட விஜய் டிவிக்கு குறைவான டி.ஆர்.பி ரேட்டிங்கே கிடைத்துள்ளது.  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு  இரண்டாம் இடமே கிடைத்துள்ளது.

 

முதலிடத்தில் சன் டிவி இருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டம் என்பதால் டி.ஆர்.பி ரேட்டிங் உயரும் என நம்பிக்கையில் இருக்கிறது விஜய் டி.வி.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!