விஜய் டிவி முக்கிய தொடர் நிறுத்தப்பட்டுவிட்டதா? சீரியல் குழு கொடுத்த விளக்கம்..!

Published : Jun 20, 2021, 08:13 PM IST
விஜய் டிவி முக்கிய தொடர் நிறுத்தப்பட்டுவிட்டதா? சீரியல் குழு கொடுத்த விளக்கம்..!

சுருக்கம்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொடர்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் திடீர்  என ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்ற சீரியல் நிறுத்தப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து சீரியல் குழு இதற்க்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.  

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொடர்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் திடீர்  என ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்ற சீரியல் நிறுத்தப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து சீரியல் குழு இதற்க்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு முதல் சீஸனின் போது, அடுத்தடுத்து சில முக்கிய சீரியல்கள் நிறுத்தப்பட்டது. சில சீரியல்களின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி ஒளிபரப்பானது. முதல் சீசனை போல், இரண்டாவது சீசன் தலை தூங்கியதால் சில சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும் இந்த சீரியல் பணிகள் மீண்டும் துவங்கி விட்டதாக ப்ரோமோக்கள் மூலம் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், விஜய் டிவி சூப்பர் ஹிட் சீரியலான 'மௌனராகம் 2 ' சீரியல் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

எனவே இந்த சீரியல் நிறுத்தப்படுகிறதா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதுகுறித்து சீரியல் குழு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில், 'நண்பர்களே, தவிர்க்க முடியாத சூழல் காரணமாக மௌன ராகம் 2 சீரியல் படப்பிடிப்பு, ஒளிபரப்பு தொடர்பாக அறிவிப்புகள், கொரொனா தொற்று காரணமாக, படப்பிடிப்பு தொடங்க முடியவில்லை. எங்களிடம் மௌனராகம் 2 சீரியல் ஒளிபரப்புவதற்கு எபிசோடுகள் இருப்பு இல்லாததால் ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், நாட்கள் சென்றுவிட்டன. நாங்கள் விரைவில் மீண்டும் வருவோம். நன்றாக செயல்படுவோம் என்று நம்புகிறோம். உங்களுடைய அன்பையும் ஆதரவையும் அப்படியே வைத்திருங்கள்' என்று தெரிவித்துள்ளார்கள்.

'மௌன ராகம் 2 ' சீரியல் குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது. எனவே விரைவில் இந்த சீரியலின் படப்பிடிப்புகள் துவங்க பட்டு, ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மௌன ராகம் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்திற்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததோ அதே அளவிற்கு இரண்டாம் பாகத்திற்கும் நன்கு வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?