இன்னைக்கு பழைய கண்ணம்மாவை பார்ப்பீர்கள்...காளியாக மாறிய கண்ணம்மா

Published : Oct 31, 2022, 02:22 PM ISTUpdated : Oct 31, 2022, 02:55 PM IST
இன்னைக்கு பழைய கண்ணம்மாவை பார்ப்பீர்கள்...காளியாக மாறிய கண்ணம்மா

சுருக்கம்

பழைய கண்ணம்மாவை பாரதி பார்க்கப் போகிறார். நீங்களும் தான் பார்க்க போகிறீர்கள். நான் சும்மா விடமாட்டேன் என ஆவேசமாக கொந்தளித்தபடி வருகிறார்.

திருமண மண்டபத்தில் இருந்து தப்பித்து செல்லும் வெண்பா.. பாரதியை திருமணம் செய்து கொள்வதற்காக மண்டபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் லேப்பில் இருந்து ரிசல்ட் வந்தவுடன் வெண்பாவை மணம் முடிக்கும் எண்ணத்தில் தான் இருக்கிறார் பாரதியும். இதைத்தொடர்ந்து சாந்தியின்  கழுத்தில் அருவாமனையை வைத்து உண்மையை தெரிந்து கொள்ளும் கண்ணம்மா, மிகவும் கொந்தளிக்கிறார். எப்படி வெண்பாவின் கழுத்தில் பாரதி தாலி கட்டுகிறார் என்பதை பார்த்து விடுகிறேன் என ஆவேசமாக புறப்பட்டு இருந்தார். 

இன்றைய எபிசோடில் கோவிலுக்கு வரும் வெண்பா எங்கு இருக்கிறாய் என கேட்க  பாரதிக்கு போன் செய்கிறார், ஆனால் பாரதி போனை எடுக்கவில்லை. இதனால் மிகவும் கடுப்பாகிறார் வெண்பா. அந்த நேரத்தில் காரில் வரும் பாரதி கோவிலுக்கு அருகிலேயே காத்திருக்கிறார். ஆனால் காரை விட்டு இறங்காமல் லேபிற்கு போன் செய்கிறார் பாரதி, அப்போது லேபில் இருந்து ரிசல்ட் வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் எங்களது மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது, நீங்கள் செய்ய வேண்டியதை இரண்டு நாட்களுக்கு செய்யலாமே என கூறுகின்றனர். இதனால் கடுப்பாகும் பாரதி அவர்களை கடுமையாக சாடுகிறார்.

இதை தொடர்ந்து போன் பாரதியை தொடர்பு கொள்ளும் வெண்பாவிடம் தான் கோவிலுக்கு டிராபிக் மூலமாக இருப்பதால் இன்னும் சிறிது நேரத்தில் கோவிலுக்கு வந்து விடுவேன் என கூறுகிறார். பின்னர் அர்ச்சகர் வெண்பாவை அழைத்ததால் கோயிலுக்கு சென்று விடுகிறார் . இதற்கிடையே காரில் திருமணத்தை நிறுத்துவதற்காக வரும் கண்ணம்மா ஆவேசமாக பேசிக்கொண்டே வருகிறார். அப்போது சௌந்தர்யாவிடம் பழைய கண்ணம்மாவை பாரதி பார்க்கப் போகிறார். நீங்களும் தான் பார்க்க போகிறீர்கள். நான் சும்மா விடமாட்டேன் என ஆவேசமாக கொந்தளித்தபடி வருகிறார்.

மறுபுறம் ஹேமாவும் லட்சுமியும் அழுது கொண்டே இருக்க அஞ்சலி அவர்களை சமாதானப்படுத்துகிறார் .மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார் ஷர்மிளா. இவர்கள் ஒரு புறம் காரில் வர பாரதியும் காத்திருக்க இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!