கோபியின் அம்மாவை நினைந்து பயப்படும் ராதிகாவின் குடும்பத்தார்...செழியனை எதிர்த்து நிற்கும் ஜெனி..

Published : Sep 23, 2022, 03:37 PM ISTUpdated : Sep 23, 2022, 06:53 PM IST
கோபியின் அம்மாவை நினைந்து பயப்படும் ராதிகாவின் குடும்பத்தார்...செழியனை எதிர்த்து நிற்கும் ஜெனி..

சுருக்கம்

என்ன நடந்தாலும் ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டியே தீருவேன் என உறுதி அளிக்கிறார் கோபி..

இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில்.. வீட்டிற்கு வரும் ஏழில் தன்னை தயாரிப்பாளர் தன் இஷ்டத்திற்கே படத்தை உருவாக்குமாறு கூறிவிட்டார் என மிகவும் சந்தோசமாக தெரிவிக்கிறார். அதோடு இந்த விஷயத்தை அமிர்தாவுக்கும் போன் செய்து கூறுகிறார். ஆனால் வர்ஷினி உடன் பைக்கில் வந்த விஷயத்தை சொல்ல மறந்து விடுகிறார் எழில். இதனால் குழப்பம் அடையும் அமிர்தா. ஏன் இதை சொல்லாமல் விட்டார் ஒரு வேலை அவர் மனதில் நாம் சரியாக இடம் பிடிக்கவில்லையோ என ஒரே குழப்பம் அடைகிறார்.

மீண்டும் போன் செய்யும் ஏழில்  ஒன்று சொல்ல மறந்து விட்டேன் உங்கள் வீட்டு வழியாகத்தான் வந்தேன் என வர்ஷினுடன் வந்த விஷயத்தை கூறுகிறார். இதனை அடுத்து நிம்மதி அடைகிறார் அமிர்தா. இந்தப்பக்கம்  ராதிகா மிகவும் சோகமாக அமர்ந்திருக்க அவரது அண்ணன் என்ன விஷயம் என கேட்கிறார். திருமணம் சரியாகத்தானே நடக்கும் அண்ணா என கவலையுடன் கேட்கிறார் ராதிகா.  எல்லாம் சரியாகத்தான் நடக்கும் நீ இந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறுகிறார் ராதிகாவின் அண்ணன்.

மேலும் செய்திகளுக்கு...அமைச்சரை தொடர்ந்து காமெடி நடிகர் போண்டா மணிக்கு உதவிக்கரம் நீட்டிய பார்த்திபன்..


அப்பொழுது வரும் கோபியிடம் ராதிகாவின் தாயார், நீங்கள் திருமணம் குறித்து உங்கள் வீட்டில் யாரிடமாவது கூறினீர்களா? என கேட்க என் அம்மாவிடம் கூறினேன் எனக் கூறுகிறார் கோபி. உங்க அம்மாவிடமா? அவர் போதும் முன்னதாக வீட்டிற்கு வந்து எப்படி எல்லாம் பேசினார் தெரியுமா? கண்டிப்பாக அவர் திருமணத்தை நடத்த விட மாட்டார் என பயப்படுகிறார் ராதிகாவின் தாய்.  உடனே கோபி அம்மா அப்படியெல்லாம் செய்யமாட்டார்.  நான் என்ன நடந்தாலும் ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டியே திருவேன் என உறுதி அளிக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு....அட ஹனுமான் படத்தில் வருவது திருச்சிற்றம்பலம் நாயகி நித்யாமேனனா? சிறு வயதில் எவ்ளோ க்யூட்டாக இருக்காங்க..

மறுபுறம் பாக்கிய தனது வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு ரிசப்ஷனுக்கு சமைக்க கல்யாண மண்டபத்திற்கு கிளம்புகிறார். ஜெனி நான் உங்களோடு வருகிறேன் எனக் கூற செழியனோ அம்மாவுடன் போகக்கூடாது என ஜெனியை தடுக்கிறார், ஆனால் செழியனின் பேச்சை மீறி புறப்படுகிறார் ஜெனி.  இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!