சூட்டிங் நடக்கும் போதே பேட்ட கதையை திருடி விஜயிடம் கொடுத்த அட்லீ... வசமாக சிக்கிய சம்பவம்!!

Published : Oct 15, 2018, 02:53 PM ISTUpdated : Oct 15, 2018, 06:03 PM IST
சூட்டிங் நடக்கும் போதே பேட்ட கதையை  திருடி விஜயிடம் கொடுத்த அட்லீ...    வசமாக சிக்கிய சம்பவம்!!

சுருக்கம்

என்ன தான் விஜயை வைத்து மெர்சல் மாதிரியான் ஹிட் படங்களை கொடுத்தாலும், அட்லிக்கு காப்பி கேட் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு கெட்ட பெயர் இருக்க தான் செய்கிறது . 

என்ன தான் விஜயை வைத்து மெர்சல் மாதிரியான் ஹிட் படங்களை கொடுத்தாலும், அட்லிக்கு காப்பி கேட் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு கெட்ட பெயர் இருக்க தான் செய்கிறது . அட்லீயின்  எந்த படத்தை எடுத்தாலும் அதில் ஏதாவது ஒரு படத்தின் சாயலை அப்படியே பார்க்கலாம் . கதை மட்டுமல்ல சில சீன்களும் கூட அப்படியே இன்னொரு படத்தில் காப்பி அடிக்கப்பட்டதாக இருந்திருக்கின்றன. இதனாலேயே அட்லீயை வசமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். 

மெர்சல் திரைப்படத்தில் கூட ரஜினியின் மூன்று முகம் திரைப்படத்தை தான் அட்லீ காப்பி அடித்திருக்கிறார் என்று , மூன்று முகம் படத்தின் காப்பி ரைட் உரிமையாளர் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு செட்டில்மெண்ட் செய்யும் படி உத்தரவு வேறு வந்திருக்கிறது. இது போன்ற சம்பவங்களால் தற்போது அட்லீயுடன் மீண்டும் படம் செய்யலாம் என்ற தனது முடிவினை தற்போதைக்கு தள்ளி வைத்திருக்கிறார் விஜய். மெர்சல் ரிலீசான புதிதில் விஜய் அட்லீ படத்தில் தான் மீண்டும் நடிக்கப்போகிறார் என அப்போதே தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

ஆனால் அவர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்தார். இப்போது சர்காரும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. பொதுவாகவே ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்னதாகவே அடுத்த படம் குறித்த அறிவிப்பினை விஜய் வெளியிட்டிருப்பார். ஆனால் இந்த முறை மிகவும் பொறுமையாக கதை கேட்டு வருகிறாராம். அதற்கும் காரணம் அட்லீ தானாம். 

அட்லீ இயக்கத்தில் தான் அடுத்த படம் என்ற எண்ணத்தில் கதை கேட்ட விஜயை , கதை சொல்லியே அப்செட் ஆக்கி இருக்கிறார் அட்லீ. அவர் சொன்ன கதை எல்லாம் சூப்பர் தான் . ஆனால் அந்த கதையில் சூப்பர் ஸ்டார் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது தான் பிரச்சனை. அதே தான் பேட்ட படத்தின் கதையை தான் கொஞ்சம் ஆல்டர் பண்ணி விஜய்க்கு சொல்லி இருக்கிறார் அட்லீ.
இதனால் கடுப்பான விஜய் கதையை மாற்றி கொண்டுவரும்படி கூறி இருக்கிறார். பேட்ட படத்தில் ஒரு கல்லூரியில் வார்டனாக வருகிறார் ரஜினி. 

அப்போது அங்கு மாணவர்களுக்கு இடையே வரும் பிரச்சனை ஒன்றினை பாஷா பாணியில் சரி செய்து வைக்கிறார். அப்போது தான் அவரின் ஃப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகுகிறது. அதில் மதுரை பக்கம் மிகப்பெரிய டானாக இருந்த ரஜினி இப்படி வார்டனாக ஆனது ஏன்? என்பது தான் கதை.

அட்லீ சொன்ன கதையிலும் இதே மாதிரி ஃப்ளாஷ்பேக் , மதுரை என எலமெண்டுகள் இருந்ததால் தான் விஜயும் அப்செட் ஆகி இருக்கிறார். மறுபடியும் மெர்சலுக்கு வந்த கெட்ட பெயர் அடுத்த படத்துக்கும் வந்துவிட கூடாது என்பதில் தெளிவாக இருப்பதனாலேயே இப்போது பொறுமையாக கதை கேட்டு கவனமாக செயல்பட்டு வருகிறாராம் விஜய்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' பட கதை இதுதானா? லீக்கான ஸ்டோரி... ஷாக் ஆன படக்குழு..!
கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்