
ஏ.ஆர்.முருகாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்திற்காக போட்டோ ஷூட் புகைப்படம் வெளியானது.
மெர்சல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பின் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் மற்றும் கலை இயக்குநராக சந்தானம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது.
இந்த இரண்டு கெட்டப்பில் ஒன்று வயாதான பணக்காரர் போல தோற்றமளிக்கிறார். மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார். மற்றொன்று மிகவும் இளமையாகவும் ஸ்லிம்மாகவும் காணப்படும் போட்டோஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.
இதற்கு முன்னதாக விஜய் நடித்து வெளிவந்த படம் மெர்சல். இந்த படத்தில் இடம் பெற்ற காட்சிகள் ஜிஎஸ்டி குறித்து இடம் பெற்றதால் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காரணம், தமிழகத்தில் தற்போது அரசியலில் வருவதற்கு நடிகர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இது போதாத குறையாக,மெர்சல் படம் வரும் போது, விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திர சேகர் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை முன் வைத்து பேசினார்.
இந்நிலையில், விஜய்யின் அடுத்த படம் எந்த கதை அம்சத்தை கொண்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.