சம்மரில் ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் பிளாக்பஸ்டர் படம்; அஜித் படத்துக்கு போட்டியா ?

Published : Feb 12, 2025, 03:00 PM IST
சம்மரில் ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் பிளாக்பஸ்டர் படம்; அஜித் படத்துக்கு போட்டியா ?

சுருக்கம்

அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு போட்டியாக விஜய்யின் பிளாக் பஸ்டர் படம் ஒன்று வரும் ஏப்ரல் மாதத்தில் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனால் சம்மர் பாக்ஸ் ஆபீசில் விஜய்யின் ரீரிலீஸ் படமும் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

சென்னை :  நடிகர் விஜய்யின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் படம் ரிலீசாகி 20 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் தியேட்டரில் இந்த ஆண்டு சம்மரில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

விஜய் தற்போது டைரக்டர் ஹச்.வினோத் இயக்கும் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படுவதால் அனைவரின் கவனமும் இந்த படத்தின் மீது இருந்து வருகிறது. இந்த படத்தின் வேலைகள் சமீபத்தில் தான் துவங்கப்பட்டு, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் யாரும் எதிர்பாராத விதமாக சம்மரில் விஜய்யின் பிளாக்பஸ்டர் படம் ஒன்று ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரீரிலீசாகும் விஜய்யின் சச்சின் :

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய், ஜெனிலியா தேஷ்முக் நடித்து 2005ம் ஆண்டு ரிலீசான படம் சச்சின். ரொமான்டிக் காமெடி படமான இந்த படம் ரிலீசாகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சம்மர் கொண்டாட்டமாக சச்சின் படத்தை இந்த ஆண்டு சம்மரில் ரீரிலீஸ் செய்ய உள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். "கோடையில் கொண்டாட்டம்" என்ற கேப்ஷனுடன் அவர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

டைரக்டர் ஜான் இயக்கத்தில் தமிழில் வெளியான சச்சின் படத்தில் ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலி, சந்தானம், ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். முழு நீள காதல் காமெடி படமான சச்சின் படத்தில் சச்சின் என்ற டைட்டில் ரோலில் விஜய்யும், ஷாலினி என்ற ரோலில் ஜெனிலியாவும் நடித்திருந்தனர். ஊட்டியில் உள்ள கல்லூரியில் நடக்கும் காமெடி, காதல் தான் படத்தின் கதையே. இந்த படம் 2005ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. 

20ம் ஆண்டு கொண்டாட்டம் :

விஜய்-வடிவேலு காம்போவில் உருவான இந்த படத்தின் காமெடி சீன்கள், காதல் பாடல்கள் ஆகியன ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடுத்தை பிடித்துள்ளன. இந்நிலையில் தயாரிப்பாளர் தாணுவின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. "கோலிவுட் கடவுளை தரிசிக்க நேரம் வந்து விட்டது", "2025ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் லோடிங்" என ரசிகர்களை கமெண்டுகளை அள்ளி குவித்து வருகிறார்கள். விஜய்யின் சிறந்த படங்களில் ஒன்று என சிலர் கருத்து தெரிவித்திருந்தாலும், இன்னும் சிலரோ, "அஜித்தின் "குட் பேக் அக்லி" படத்துடன் மோத போகிறதா?" என கேட்டுள்ளனர்.  

அஜித்துடன் மோதும் விஜய் :

டிஜிட்டலில் 4k வடிவத்திற்கு மாற்றப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி சச்சின் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சச்சின் படத்தை 4k வெர்ஷனுக்கும் மாற்றும் பணிகள் படு மும்முரமாக நடந்து வருகிறது. அஜித்தின் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், அடுத்த நாளே சச்சின் படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை