ஒரேயொரு பெட்டிஷனில் ஒரேடியாய் அரண்டு, மிரண்ட தளபதி விஜய்... என்னடா நடக்குது கோலிவுட்ல..?

By Vishnu PriyaFirst Published Apr 24, 2019, 6:04 PM IST
Highlights

ஃபோக்கஸ் லைட் விழுந்ததில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எலெக்ட்ரீசியன் செல்வராஜை, நடிகர் விஜய் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

* தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காத காரணத்தினால், மக்களின் அடிப்படை பிரச்னைகள் எல்லாம் முடங்கியுள்ளன. குப்பை மேடுகள் மலை போல் குவிந்துள்ளன: ஸ்டாலின். (தல, காய்ஞ்சு போன குளத்துல இறங்கி மண்ணள்ளி கொட்டுனா மாதிரி, குப்பை மேட்டில் ஏறி நீங்க சுத்தம் பண்ணுனீங்கன்னு வெய்யுங்க, லைக்ஸ் பிய்ச்சுக்கும். அப்புறம் தேர்தல்தான், ஜெயிப்புதான், ஆட்சிதான், ஆரவாரம்தான்)

* பெங்களூரு, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களை பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்: வெங்கய்யா நாயுடு. (இதைக்கேட்டு மோடி........’மத்தியமைச்சரா இருக்கிற வரைக்கும் சாதாரண அரசியல்வாதியா கட்சியை காப்பாத்துற மனுஷங்க, இப்படி துணை ஜனாதிபதி, ஜனாதிபதின்னு ஆனதும் ஸ்பெஷல் பிறவிங்களா மாறி, மக்களுக்கு ஆபந்த்பாந்தவன் அவதாரம் எடுக்குற சீன்ஸெல்லாம் என்னைக்குதான் மாறுமோ’ன்னு மண்டை காய்ஞ்சிருப்பாரே.)

* பா.ஜ.க.வின் கொள்கை பிடித்திருக்கிறது என்று சொன்னாரே தவிர, அந்த கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறவில்லையே சூப்பர் ஸ்டார்: ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா. (ஏம்ணே! நெல்லுக்கு இறைச்ச நீர் அப்படிக்கா ஓடி புல்லுக்கும் பாயுறா மாதிரி, நீங்களும் உங்க தம்பியோட ரசிக குஞ்சுகளை வெச்சுக்கிட்டு அங்கேயிங்கே போயி  பில்ட் அப் கொடுக்கத்தான் செய்யுறீங்க. ஆனா இந்த லதாதான் கட்டைய போட்டு உங்களோட காரை பஞ்சராக்கிடுறாங்க.

* ஃபோக்கஸ் லைட் விழுந்ததில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எலெக்ட்ரீசியன் செல்வராஜை, நடிகர் விஜய் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்: செய்தி (பார்த்தியா மச்சான், ஒரு கிருஷ்ணா தேவியோட பெட்டிஷன் எந்தளவுக்கு இறங்கி வேலை செய்யுதுன்னு. கம்முன்னு கெடந்தாக்க, கால்ல போட்டு மிதிப்பாய்ங்க, திரும்பி உருமுனோமுன்னு வெய்யி, தெறிச்சு ஓடுவாய்ங்க)

* நான் அதிபர் பதவியிலிருந்து விலகியபோது நாட்டில் அமைதி நிலவியது. பயங்கரவாதம் இல்லாத நாட்டை ஒப்படைத்துவிட்டு சென்றேன். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் உள்நாட்டு பாதுகாப்பில் கோட்டைவிட்டுள்ளனர்: ராஜபக்‌ஷே (அடியே பக்‌ஷே, நீ  பேசுறது எப்படியிருக்குதுன்னு வெய்யி....கசாப்புக் கடைக்காரன், கறுத்த ஆட்டுக் குட்டி ஒண்ணு கார் டயர்ல சிக்கி செத்துப் போச்சேன்னு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுறா மாதிரி இருக்குது. எதுல சிரிக்குறதுன்னு தெரியல)

click me!