விஜய்யை பீட் அடிக்க துடிக்கும் ரஜினி! என்று வைரலாகும் இந்த விவகாரத்தில் செம்ம பியூட்டி என்னவென்றால், இரண்டு படங்களையும் தயாரிப்பது சன் பிக்சர்ஸே
பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில் அப்படத்தின் நெக்ஸ்ட் சிங்கிள் அல்லது மொத்த ஆல்ப ரிலீஸுக்கான வைபரேஸன் துவங்கிவிட்டது. ஆனால் அதை பீட் அடிக்க துடிக்கிறது ரஜினிகாந்தின் புதிய படத்தின் காஸ்ட் மற்றும் டெக்னிக்கல் க்ரூ அப்டேட்ஸ்.
விஜய்யை பீட் அடிக்க துடிக்கும் ரஜினி! என்று வைரலாகும் இந்த விவகாரத்தில் செம்ம பியூட்டி என்னவென்றால், இரண்டு படங்களையும் தயாரிப்பது சன் பிக்சர்ஸே, இரண்டு படங்களின் இயக்குநரும் நெல்சனே, இரண்டு படங்களின் இசையமப்பாளரும் அனிருத்தே. ஆக பல ஒற்றுமைகள் இருந்தாலும் கூட இன்னும் துவக்கவே படாத ரஜினியின் படமோ, ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் விஜய் படத்தை வைரல் ரீதியில் பின்னுக்கு தள்ள துடிப்பது கெத்தாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரஜினி படத்தின் புதிய அப்டேட்டாக, அதில் விஜய் சேதுபதி இணைகிறார்! என்கிறார்கள். ஏற்கனவே இதே சன்பிக்சர்ஸ் தயாரித்து மெகா ஹிட்டடித்த ’பேட்ட’ படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி இணைந்திருந்தார். அதில் நெகடீவ் ரோல் செய்திருந்த வி.சே.வுக்கு இதில் வேறு மாதிரி அழுத்தமான ரோல் என்கிறார்கள்.
ரஜினிக்கும், விஜய்சேதுபதிக்கும் திரையில் கெமிஸ்ட்ரி அப்படத்தில் ஒத்துப் போனது போல் இயல்பு வாழ்விலும் ஒத்துப் போகும். இருவருமே சினிமாவுக்கு சம்பந்தமில்லாத நிலையிலிருந்து உள்ளே நுழைந்து உச்சம் தொட்டவர்கள். இருவருமே கருப்பு நிறம், இருவருமே மேக்-அப் விஷயத்தில் ஓவர் அலட்டல் செய்து தங்களை செக்கச் சிவப்பென காட்ட முயலாமல் இயல்பான நிறத்திலேயே ஈர்ப்பவர்கள். இருவருக்குமே பெண் ரசிகர்கள் மிக அதிகம்.
அந்த வகையில் ரஜினியோடு இந்த தெறி ப்ராஜெக்டில் விஜய் சேதுபதி சேர்ந்தால், படம் அள்ளிக் கொண்டு போகும்! என்று இயக்குநர் நினைப்பதால் அவரையே டிக் செய்துள்ளதாக தகவல். மேலும், நடுத்தர வயதை தாண்டிய நிலை தோற்றத்துடன் ரஜினி இதில் நடிப்பதால் நயன் அல்லது த்ரிஷாவை ஹீரோயினாக்கலாம் எனும் பேச்சும் ஓடிக் கொண்டிருக்கிறது.
கூடிய விரைவில் எல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.