தூக்கி நிறுத்த போராடும் த்ரிஷா..! கைகொடுத்த விஜய் சேதுபதி.!

Published : Jan 30, 2022, 07:05 PM IST
தூக்கி நிறுத்த போராடும் த்ரிஷா..! கைகொடுத்த விஜய் சேதுபதி.!

சுருக்கம்

இரண்டு பேரின் மார்க்கெட்டும் அநியாயத்து டல்லடித்து கிடக்கிறது. உடனடி ஹிட் இருவருக்கும் தேவை

  • எல்லையில் அதிமுக்கிய  பாதுகாப்பு பணியிலிருக்கும் இராணுவ வீரர்களால் அவசர தேவைக்கு கூட தங்களின் குடும்பத்தினரை பார்க்க வரமுடியவில்லை. ஆனால் சமந்தா, தனது இரண்டு செல்ல நாய்களைப் பார்ப்பதற்காக ஐதராபாத்தில் இருந்து, பெங்களூரில் இருந்து அடிக்கடி சென்னைக்கு பறந்து வருகிறாராம்.

(ஏன்டிமா அதுங்களுக்கு ஸ்பெஷல் ஃப்ளைட் ஒண்ணு வெச்சுக்க வேண்டிதான?)

  • தமிழகத்தில் ‘நடிக்க தெரிந்த ஹீரோயின்’ என பெயரெடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். எப்பவாச்சும் இலை மறை காயாக அவரை கிளாமரில் காட்டுவது நம்மூர் இயக்குநர்களின் வழக்கம். ஆனால், அக்கட பூமியில் ஐஸ்வர்யாவை கிளாமரையும் தாண்டிய நிலையில் காட்டுவதையே குறிக்கோளாக வைத்துள்ளார்களாம் இயக்குநர்கள். நான் நடிக்கிறேன்! என்று அவர் அடம் பிடித்தாலும், அது யாருக்கு மேம் வேணும்? என்கிறார்களாம்.

( ஹும் நடிகைகள் நடிக்கிறதா முக்கியம்?....)

  • விஜய் சேதுபதி, த்ரிஷா இரண்டு பேரின் மார்க்கெட்டும் அநியாயத்து டல்லடித்து கிடக்கிறது. உடனடி ஹிட் இருவருக்கும் தேவை. அதனால் அவர்கள் இணைந்து நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் எனும் முடிவில் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் யாரும் அமையாவிட்டால் சேதுவே தயாரிக்க தயாராக இருக்கிறாராம்.

(பாஸு யார வேணா மாத்துங்கோ ஆனா இசைக்கு கோவிந்த் வசந்தா தான் வேணும்)

  • சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரை ‘டா.மு’ ‘டா.பி’ என்று மாற்றிக் கொள்ளலாம். அதாவது டாக்டர்!க்கு முன், டாக்டர்!க்கு பின் என்பதே அது. தொடர்ந்து டல் படங்களை தந்ததன் மூலமாக சரிந்த அவரது மார்க்கெட்டை டாக்டர் படம் தூக்கி நிறுத்தியுள்ளது. இதன் மூலம் அவரும், விக்னேஷ் சிவனும் இணைய நினைத்து ‘மெகா பட்ஜெட்! தாங்குவாரா சிவகார்த்தி’ என்று நினைத்த ஒரு கதையை ஃபுல் ஸ்விங்கில் துவக்குகிறார்கள்.

( அப்படி அந்த டாக்டர்ல என்னதான் இருந்துச்சுன்னு அப்படி வசூலாச்சு? என்கிறது தனுஷ் தரப்பு)

  • தனது புதிய பட ஷூட் முடிந்ததும் அமெரிக்கா, லண்டன் என்று பறந்து ரிலாக்ஸ் செய்துவிட்டுதான் அடுத்த புதிய பட ஷூட்டிங்கில் இறங்குவார் தளபதி விஜய். ஆனால் பீஸ்ட்-க்கு பிறகும் சென்னையிலேயே முகாமிட்டுள்ளார். எல்லாம் அரசியல் பணிகளுக்காகதானாம். எனவே கையோடு தெலுங்கு பட ஷூட் துவங்கிவிடும் என்கிறார்கள்.

(தளபதி தலைவா! ஆகிறார்)

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!