சம்பாதிப்பதில் பாதியை படத் தயாரிப்பில் விட முடிவு செய்த விஜய் சேதுபதி...’சென்னை பழனி மார்ஸ்’...

Published : May 18, 2019, 05:37 PM ISTUpdated : May 18, 2019, 05:38 PM IST
சம்பாதிப்பதில் பாதியை படத் தயாரிப்பில் விட முடிவு செய்த விஜய் சேதுபதி...’சென்னை பழனி மார்ஸ்’...

சுருக்கம்

கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டுக்களைக் குவித்த ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தயாரிக்கும் படத்துக்கு ‘சென்னை பழநி மார்ஸ்’ எனப் புரியாத தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் கதையையும் விஜய் சேதுபதி எழுதியுள்ளார்.  

கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டுக்களைக் குவித்த ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தயாரிக்கும் படத்துக்கு ‘சென்னை பழநி மார்ஸ்’ எனப் புரியாத தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் கதையையும் விஜய் சேதுபதி எழுதியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில், பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. ‘கைலாசம்’ என்ற வயதான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார். மேலும், ‘விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் இந்தப் படத்தையும் அவரே தயாரித்திருந்தார். இதுதவிர, இந்தப் படத்தின் கதையை பிஜு விஸ்வநாத்துடன் சேர்ந்து விஜய் சேதுபதியும் எழுதினார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கையும் பிஜு விஸ்வநாத் கவனிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்தார். வி.சே.வின் கேரியரில் மறக்க முடியாத மொக்கைப் படமாக அது அமைந்திருந்தது.

இந்நிலையில், இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ‘சென்னை பழநி மார்ஸ்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். பிஜு விஸ்வநாத் இயக்கவுள்ள இந்தப் படத்தின் கதையை இம்முறையும் விஜய் சேதுபதி - பிஜு விஸ்வநாத் இணைந்து எழுதியுள்ளனர்.மேலும், இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். 

ஆனால், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. முதன்மைக் கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். நிரஞ்சன் பாபு இசையமைக்கும் இந்தப் படத்தில், 6 பாடல்களையும் விக்னேஷ் ஜெயபால் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் இசை உரிமையை திங்க் மியூஸிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.வருகிற 22-ம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார் விஜய் சேதுபதி. படத் தயாரிப்பில் அடுத்தடுத்து இறங்குவதன் மூலம் நடித்துச் சம்பாதித்ததை நல்ல சினிமா தயாரித்து விடுவது என்ற கமலின் பாணிக்கு வருகிறார் விஜய் சேதுபதி. அந்த நல்ல மனம் வாழ்க.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!