Kaathuvaakula Rendu Kaadhal censor : காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு சென்சாரில் காத்திருந்த அதிர்ச்சி

Published : Apr 25, 2022, 01:51 PM IST
Kaathuvaakula Rendu Kaadhal censor : காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு சென்சாரில் காத்திருந்த அதிர்ச்சி

சுருக்கம்

Kaathuvaakula Rendu Kaadhal : முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

நானும் ரவுடி தான் வெற்றிக்கு பின்னர் விக்னேஷ் சிவனும், விஜய் சேதுபதியும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. முன்னணி நடிகைகளான சமந்தாவும், நயன் தாராவும் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் டான்ஸ் மாஸ்டர் கலா ஆகியோர் இப்படத்தின் மூலம் நடிகர்களாக களமிறங்கி உள்ளனர். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ராம்போ என்கிற கதாபாத்திரத்திலும், நயன்தாரா கண்மணியாகவும், சமந்தா கத்திஜாவாகவும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் சென்சார் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதால் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இப்படத்தை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Soorarai Pottru Hindi remake : சூரரைப் போற்று இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சூர்யா

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!