Soorarai Pottru Hindi remake : சூரரைப் போற்று இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சூர்யா

Published : Apr 25, 2022, 01:04 PM ISTUpdated : Apr 25, 2022, 01:06 PM IST
Soorarai Pottru Hindi remake : சூரரைப் போற்று இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சூர்யா

சுருக்கம்

Soorarai Pottru Hindi remake : சுதா கொங்கரா இயக்கும் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கி உள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படம் சூரரைப்போற்று. சூர்யா நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், கேகே, நிவாஸ் பிரசன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது.

ஏர் டெக்கான் நிறுவனம் கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சிவாரஸ்ய சம்பவங்களை மையமாக வைத்து சூரரைப் போற்று திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. சூர்யாவின் எதார்த்தமான நடிப்பு, சுதா கொங்கராவின் நேர்த்தியான திரைக்கதை, ஜிவி பிரகாஷின் அசத்தலான பின்னணி இசை என அனைத்தும் ஒர்க் அவுட் ஆனதால் இப்படம் வெற்றி வாகை சூடியது.

சூரரைப் போற்று வெற்றிக்கு பின் அப்படத்தை ரீமேக் செய்ய பிற மொழி நடிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். அந்த வகையில் முதலாவதாக இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தையும் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கி உள்ளது.

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடிக்கிறார். இப்படத்தை அபுண்டண்டியா நிறுவனத்துடன் இணைந்து சூர்யா - ஜோதிகாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தி படம் இதுவாகும். இதன்மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார் சூர்யா. மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Vikram Movie : விக்ரம் படத்தில் இளம் வயது கமல்! யம்மாடியோ... இதற்காக மட்டும் இத்தனை கோடி செலவா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!