புது கெட்டப்பில் விஜய் சேதுபதி  கொடுத்த அதிர்ச்சி ....!!!

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 01:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
புது கெட்டப்பில் விஜய் சேதுபதி  கொடுத்த அதிர்ச்சி ....!!!

சுருக்கம்

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த திரைப்படம் தர்மதுரை.

இந்த படம் இதுவரை விஜய் சேதுபதி நடித்ததிலேயே மிக அதிகமான பட்ஜெட்டில் எடுக்க பட்ட படம் என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனம் தயாரித்திருந்தது.

தற்போது இந்த படத்தின் 100வது நாள் வெற்றிவிழா, சென்னையில் அமைந்துள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் இந்த படத்தில் பணியாற்றிய  இயக்குனர் சீனு ராமசாமி , நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் ஆர் .கே.சுரேஷ் போன்ற பலர்  கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, புது கெட்டப்பில் வந்து பலரையும் ஆச்சர்ய படுத்தியுள்ளார், அந்த அளவிற்கு இந்த புது கெட்டப் அவருக்கு பொறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது விஜய் சேதுபதி,  ஒரு ஒரு பாதத்திலும் தனது கெட்டபில் வித்தியாசம் காட்டி வருகிறார், அதற்கு காரணம் பலர் நீங்கள் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என கூற அந்த பெயரை மாற்ற தான் விஜய் சேதுபதி இந்த முயற்சியை கையாளுவதாக கூறப்படுகிறது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!
ஆன்லைனில் ஏமாந்த ஜி.வி. பிரகாஷ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அந்த மர்ம நபர்! நடந்தது என்ன?