விஜய் சேதுபதி ஹீரோயினுக்கு குழந்தை பிறந்தாச்சு...! குவியும் வாழ்த்து!

Published : Jul 29, 2020, 07:29 PM ISTUpdated : Jul 29, 2020, 08:04 PM IST
விஜய் சேதுபதி ஹீரோயினுக்கு குழந்தை பிறந்தாச்சு...! குவியும் வாழ்த்து!

சுருக்கம்

விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயினாகவும் பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்த நடிகை அஞ்சலி ராவுக்கு குழந்தை பிறந்துள்ளதால் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  

விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயினாகவும் பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்த நடிகை அஞ்சலி ராவுக்கு குழந்தை பிறந்துள்ளதால் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

'சூது கவ்வும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி ராவ். இந்த படத்தை தொடர்ந்து, பீட்சா 2 , மாலினி, ஆகிய பல படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 
வெளியான வன்மம் படத்தில் ஹீரோயினாகவும் நடித்தார்.

தொடர்ந்து சில படங்களில் நடித்த போதும் இவரால் வெள்ளித்திரையில் நீடிக்க முடியவில்லை. எனவே சின்னத்திரைக்கு தாவிய இவர், மகாலட்சுமி, தலையணை பூக்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். சில வெப் சீரிஸ் மற்றும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

படத்தொகுப்பாளர் ஜோமினை திருமணம் செய்து கொண்ட அஞ்சலி ராவ், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அஞ்சலி ராவுக்கு ஆண் குழந்தை சில தினங்களுக்கு முன்பு பிறந்ததாகவும், தற்போது இருவரும் நலமுடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அஞ்சலி ராவுக்கு தொடர்ந்து ரசிகர்கள் தங்களுடைய, வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!