
வாழ்க்கையில் முன் உதாரணமாக தலைவர்களையோ, நடிகர்களையோ, அறிஞர்களையோ என்று அவரவர் விருப்பத்துக்கேற்ப எடுத்துக் கொள்வார்கள். அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதியை பலர் தங்களது வாழ்க்கையில் முன்னுதாரணமாக எடுத்து வருகின்றனர்.
அவரது பேச்சுக்கள் கவரும் விதத்தில் இருப்பதாலேயே அவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. விஜய் சேதுபதியிடம் கேட்கும் கேள்விக்கு, மிகவும் யதார்த்தமாகவும், தன்னம்பிக்கை கொடுப்பதாகவும் அவரது தீவிர ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அவரிடம் உங்கள் மனைவி, குழந்தைகளை வெளியே காட்டாததற்கு காரணம் என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, நான் நடிகன் என்பதெல்லாம் என் அப்பாவிற்கு சொந்தமானது என்று என் குழந்தைகளிடம் கூறுவேன்.
இந்த சினிமா புகழ் என்னையே கெடுத்துவிடுமோ என்ற பயம் உள்ளது. அது குழந்தைகளை கெடுத்திடுமோ என்றும் பயப்படுகிறேன். அப்பா இல்லையா? கொஞ்சம் பொறுப்பா இருக்கிறேன் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.