
தனது பிசியான தமிழ்ப்பட ஷெட்யூல்களுக்கு மத்தியில் அவ்வப்போது தெலுங்கு மலையாளப் படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி மிக விரைவில் பாலிவுட் படம் ஒன்றில் அமீர் கானுக்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் நடமாடுகின்றன.
மலையாளத்தில் நடிகர் ஜெயராமுடன் ‘மதாய் மார்க்கோனி’படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, தெலுங்கில் சிரஞ்சீவியின் மெகா பட்ஜெட் படமான ஷைரா நரசிம்மா ரெட்டி படத்தில் முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார். இவ்விரு படங்களுமே மிக விரைவில் ரிலீஸாகவிருக்கின்றன.
இந்நிலையில் மிக சமீபத்தில் மும்பை சென்ற விஜய் சேதுபதி அமீர் கானை சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். மிக விரவில் அறிவிக்கப்படவிருக்கும் அமீர்கானின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதியை முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்கவைப்பதற்காகவே இந்த சந்திப்பு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமீர் கானுடனான சந்திப்பை விசே ரகசியமாக வைத்திருக்கும் நிலையில் அவரது மேனேஜர் ராஜேஷ் அமீர்கானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.