
இந்து கடவுள்கள் குளிப்பதை காட்டலாம் ஆடை மாற்றுவதை காட்டக்கூடாதா என சர்ச்சையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மகா சபை சார்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில், ‘’தற்போது சமூக வலைதளங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 17. 3 .2019 அன்று ஒளிபரப்பப்பட்ட நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாக தெய்வங்கள் குளிப்பதை எல்லோருக்கும் காட்ட தெரிந்தவர்களுக்கு ஏன் தெய்வங்களுக்கு உடை மாற்றும் நிகழ்வை காட்டக்கூடாது என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டதைப் போல கற்பனை செய்து இந்து மதத்தையும் அதன் வழிபாட்டு முறைகளையும் மற்றும் இந்து கோயில்களில் நடக்கும் ஆகமவிதி நடைமுறைகளையும் கேவலப்படுத்தி பேசியுள்ளார்.
இந்துக்களின் மனதில் அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதுடன், அந்த நிகழ்ச்சியின் நோக்கமே குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி? என்று காட்டுவதற்கான நிகழ்ச்சியாக அமையப்பெற்றுள்ளது. அதில் இந்து கோயில்களில் அபிஷேக அலங்கார முறைகளையும் பற்றி குறை பற்றி கூற காரணம் என்ன? இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா? ஆகையால் அய்யா அவர்கள் விஜய் சேதுபதி மீது உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்துகளின் உறவுகளை மதித்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய மகாசபை கேட்டுக்கொள்கிறது.
இதுபோன்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதத்தினை கையிலெடுக்கும் திரைப்படத் துறையினர் மற்றும் பிற மதத்தவர்களுக்கு தங்களது நடவடிக்கை ஒரு பாடமாக அமைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’’என புகார் அளித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.