’சங்கத்தமிழன்’படம் பத்தி என்கிட்ட எதுவும் கேக்காதீங்க’...செம டென்ஷன் காட்டும் விஜய் சேதுபதி

Published : Nov 13, 2019, 10:55 AM IST
’சங்கத்தமிழன்’படம் பத்தி என்கிட்ட எதுவும் கேக்காதீங்க’...செம டென்ஷன் காட்டும் விஜய் சேதுபதி

சுருக்கம்

தீபாவளிக்கே ரிலீஸாகியிருக்கவேண்டிய இப்படம் போதிய தியேட்டர்கள் கிடைக்காததாக் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் நாளை மறுதினம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ, படம் தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி தரவோ சம்மதிக்காமல் விஜய் சேதுபதி அடம்பிடித்து வருகிறார்.

நல்லவராக இருப்பதன் தர்ம சங்கடத்தைப் பட ரிலீஸ் சமயங்களில் தொடர்ந்து அனுபவித்து வரும் விஜய் சேதுபதிக்கு நாளை மறுநாள் ரிலீஸாக உள்ள ‘சங்கத் தமிழன்’படத்திலும் தயாரிப்பாளர் 2 கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும் அதனால்தான் அவர் பட புரமோஷன்களில் கலந்துகொள்ளவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

விஜயா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கியிருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’.இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கன்னா நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தீபாவளிக்கே ரிலீஸாகியிருக்கவேண்டிய இப்படம் போதிய தியேட்டர்கள் கிடைக்காததாக் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் நாளை மறுதினம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ, படம் தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி தரவோ சம்மதிக்காமல் விஜய் சேதுபதி அடம்பிடித்து வருகிறார்.

இதற்கான காரணத்தை விஜய் சேதுபதி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை எனினும் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகரித்ததால் வழக்கம்போல் தயாரிப்பாளர் தரப்பு அந்த சுமையை விஜய் சேதுபதி மேல் ஏற்றி அவருக்கு ஃபைனல் செட்டில்மெண்டாக சென்று சேரவேண்டிய 2 கோடி ரூபாயைத் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறப்படுகிறது. தனக்கு அடிக்கடி இவ்வாறு நடப்பதால் இந்த முறையாவது எதிர்ப்பைப் பதிவு செய்தே தீரவேண்டும் என்ற முடிவில்தான் படம் குறித்து சுத்தமாக வாயைத் திறக்காமல் இருக்கிறாராம் விஜய் சேதுபதி. அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் படத்தின் நாயகிகளும் புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்க்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?