கதைத்திருட்டு வழக்கு இன்று விசாரணை... சர்கார் படத்துக்கு தடை வர்றதுக்கெல்லாம் சான்ஸ் இருக்கா என்ன?

By vinoth kumarFirst Published Oct 25, 2018, 9:45 AM IST
Highlights

மிருக பலம் கொண்ட ‘சர்கார்’ கோஷ்டிகளிடம்  திரையுலக அமைப்புகள் நீதிபெற்றுத்தர முடியாததால் கதையின் உரிமையாளர் கோர்ட் படியேறி இருக்கிறார்.

மிருக பலம் கொண்ட ‘சர்கார்’ கோஷ்டிகளிடம்  திரையுலக அமைப்புகள் நீதிபெற்றுத்தர முடியாததால் கதையின் உரிமையாளர் கோர்ட் படியேறி இருக்கிறார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ’சர்கார்’ படத்தின் கதைப் பஞ்சாயத்து கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நடந்துவருகிறது. இதில் எந்தவித பலனும் ஏற்படாததால்  கதை என்னுடையது எனக் கூறி வருண் என்ற ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அதில், “செங்கோல் என்ற தலைப்பில் தாம் உருவாக்கிய கதை தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதனைத் திருடி 'சர்கார்’ என்ற தலைப்பில் முருகதாஸ் படமாக்கியுள்ளார். செங்கோல், சர்கார் இரண்டும் ஒரே கதை என இந்த விவகாரத்தை விசாரித்த எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் தெரிவித்திருக்கிறார். 

ஆகையால் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார். இதனை ஏற்ற நீதிபதி எம்.சுந்தர் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

click me!