அட்லியின் அடுத்த படத்தில் விஜய் ஏற்கவிருக்கும் கேரக்டர் இதுதான்...

Published : Jan 02, 2019, 01:48 PM IST
அட்லியின் அடுத்த படத்தில் விஜய் ஏற்கவிருக்கும் கேரக்டர் இதுதான்...

சுருக்கம்

‘சர்கார்’ பஞ்சாயத்துகளுக்கு சற்றும் அஞ்சாத விஜய் மீண்டும் ஒரு அரசியல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அது அரசியல் படமல்ல. பெண்கள் கால்பந்தாட்டத்தையும், அந்த விளையாட்டில் நடக்கும் வில்லத்தனங்களையும் மையமாகக் கொண்ட படம் என்ற தகவல் தற்போது லீக்காகியுள்ளது.  


‘சர்கார்’ படத்துக்குப் பின் அட்லியுடன் நடிகர் விஜய் இணையும் மூன்றாவது படத்தில் அவர் பெண்கள் கால்பந்தாட்டக்குழுவின் கோச் ஆக நடிக்கவிருப்பதாக புரடக்‌ஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

’தெறி’,’மெர்சல்’ படங்களுக்குப் பின் அட்லி,விஜய் இணையும் மூன்றாவது படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘சர்கார்’ பஞ்சாயத்துகளுக்கு சற்றும் அஞ்சாத விஜய் மீண்டும் ஒரு அரசியல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அது அரசியல் படமல்ல. பெண்கள் கால்பந்தாட்டத்தையும், அந்த விளையாட்டில் நடக்கும் வில்லத்தனங்களையும் மையமாகக் கொண்ட படம் என்ற தகவல் தற்போது லீக்காகியுள்ளது.

இப்படத்தில் விஜய் அக் கால்பந்தாட்டக்குழுவின் கோச் ஆக நடிக்கிறார். இப்படத்துக்காக கால்பந்து ஆடத்தெரிந்த 16 அழகிகளை அட்லி ஏற்கனவே ஆடிஷன் செய்து வைத்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தில் அவர் பெண்கள் கிரிக்கெட் குழுவின் கோச் ஆக நடித்திருந்த நிலையில், உடனே இன்னொரு கோச் கேரக்டரில் விஜய் நடிப்பது ஆச்சரியமான தகவல் என்றாலும், இப்படத்தை இயக்கவிருப்பவர் அட்லி என்பதால் வெளிநாட்டு மொழிகளில் வந்த கால்பந்தாட்டப் படங்களைப் பற்றிய தகவல்களை இப்போதே சேகரிக்க ஆரம்பித்தால் அட்லி எங்கிருந்து எத்தனை சீன்களைச் சுட்டார் என்று புட்டுப்புட்டு வைக்க ஏதுவாக இருக்கும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dushara Vijayan : ஜில் பனியில் கூலாகும் துஷாரா விஜயன்... இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
Malavika Mohanan : பார்த்தாலே கிக்!! இறக்கமான சுடிதாரில் மாளவிகா மோகனின் நச் போஸ்..