விஜய்யின் ‘பிகில்’பட வியாபாரம் குறித்து அஜீத் ரசிகர்களுக்கு ஒரு திகில் செய்தி...

Published : Jul 06, 2019, 12:31 PM IST
விஜய்யின் ‘பிகில்’பட வியாபாரம் குறித்து அஜீத் ரசிகர்களுக்கு ஒரு திகில் செய்தி...

சுருக்கம்

இன்னும் ஒரு மாதத்தில் ரிலீஸாகவேண்டிய அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’யின் வியாபாரமே இன்னும் சூடு பிடிக்காத நிலையில், தீபாவளிக்கு வரவிருக்கும் விஜய்யின் ‘பிகில்’பட வியாபாரம் அஜீத் கோஷ்டியினரை திகிலில் ஆழ்த்தும் அளவுக்கு ஆகியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் ஹாட்டஸ்ட் செய்தி.

இன்னும் ஒரு மாதத்தில் ரிலீஸாகவேண்டிய அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’யின் வியாபாரமே இன்னும் சூடு பிடிக்காத நிலையில், தீபாவளிக்கு வரவிருக்கும் விஜய்யின் ‘பிகில்’பட வியாபாரம் அஜீத் கோஷ்டியினரை திகிலில் ஆழ்த்தும் அளவுக்கு ஆகியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் ஹாட்டஸ்ட் செய்தி.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, யோகிபாபு  உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டிருக்கும் படம் பிகில். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 27 ஆம் தேதி தீபாவளி நாளில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.

இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்கிரீன்சீன் நிறுவனம் பெற்றுள்ளது.தமிழக உரிமை சுமார் எழுபது கோடி என்று சொல்லப்படுகிறது.இதுவே பெரிய விலை என்று எல்லோரும் வியந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்நிறுவனம், தமிழக விநியோகஸ்தர்களுக்கு இப்படத்தை விற்ற வகையில் சுமார் பத்து கோடி இலாபம் சம்பாதித்திருக்கிறதென்கிறார்கள் என்று நம்பகமான விநியோகஸ்தர் வட்டாரங்கள் சொல்கின்றன.

ஓரிரு நாட்களுக்கு முன் இப்பட வியாபாரம் தொடங்கியது. தொடங்கிய வேகத்தில் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.

அதுபற்றிய உத்தேச விவரம்…

மதுரை —— 11.20 கோடி
திருச்சி 9 கோடி
கோவை 13 கோடி
சேலம் 7 கோடி
நெல்லை 5 கோடி
செங்கல்பட்டு 16 கோடி
சென்னை 8 கோடி
நார்த் சவுத் 11 கோடி

என்று  மொத்தம் இப்படம் சுமார் எண்பது கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறதாம்.இதனால் திரையுலகம் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dhanush : பிரேக் அப் செய்து பிரிந்தார்களா தனுஷ் - மிருணாள் தாக்கூர்? காட்டுத்தீ போல் பரவும் தகவல்
Nooru Saami vs Engal Thangam Day 1 Box Office : சமந்தா vs விஜய் ஆண்டனி... முதல் நாள் வசூலில் வின்னர் யார்?