
Tamilaga Vettri Kazhagam Educational Award Ceremony: Vijay honors students! : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், கடந்த 2023ம் ஆண்டு முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியரை நேரில் அழைத்து அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு அளித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய், மூன்றாவது ஆண்டாக இந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கான விழாவை மூன்று கட்டங்களாக நடத்த முடிவு செய்திருக்கிறார்.
அந்த வகையில் முதற்கட்டமாக 88 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கான கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஷெர்டன் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், கன்னியாகுமரி, கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, வேலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும் அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றுள்ளனர். சுமார் 2 ஆயிரம் பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
இன்று 600 மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்க உள்ளார் விஜய். இந்த விழாவுக்கு வரும் மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோரு தனி அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி விழா நடைபெறும் ஹோட்டலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விழா நடைபெறும் அரங்கிற்குள் பேனா, பேப்பர், செல்போன் மற்றும் இதர பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டைப்போல் தமிழ்நாட்டிலேயே அதிக மதிப்பெண் எடுத்தவருக்கு வைரக் கம்மல் அல்லது வைர மோதிரம் பரிசாக வழங்க உள்ளாராம். அதேபோல் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு தங்க நாணயம் மற்றும் கல்வி ஊக்கத்தொகையை விஜய் பரிசாக வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கல்வி விருது நிகழ்ச்சியின் இரண்டாம் கட்ட விழா அடுத்த வாரமும், மூன்றாம் கட்ட விழா அதற்கு அடுத்த வாரமும் நடைபெற இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.