
இது கம்ப்ளீட்லி தளபதி விஜய்யின் மேஜிக்கல் நாளாக மாறி இருக்கிறது 2022 பிப்ரவரி 14 காதலர் தினம். அவரது மோஸ்ட் வான்டட் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிள்! அதுவும் வீடியோ சிங்கிள் வெளியாகி, இந்தியாவே ‘மலம பித்தா பித்தாதே மலம பித்தா பித்தாதே!’ என்று ஆடிக் கொண்டிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் இயக்க, அனிருத் இசைக்க, தளபதி விஜய்யின் தாறுமாறு ஆக்ஷனில் உருவாகி, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கும் படம்தான் ‘பீஸ்ட்’. விஜய் – அனிருத் காம்போ ஆல்ரெடி தெறிக்க விட்ட காம்போதான். இதில் நெல்சன், சிவகார்த்தியும் இணைந்து கொண்டால் அந்த படைப்பு எப்படியொரு பவர் பேக்ட் படைப்பாக தெறிக்கவிடும்! என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படித்தான் உருவாகியிருக்கிறது இப்பாடல்.
கமல்ஹாசனின் பழைய விக்ரம்! பட பாடல் நினைவிருக்கலாம். ‘ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி, சாஞ்சாடு நெஞ்ச தழுவி’ என்று கமல், டிம்பிள், ஜனகராஜ், மனோரமா என்று பெரிய படை பட்டாளமே ஆடிய பாட்டு அது. பாலைவன தேசத்தில் கமல் டீம் மாட்டிக் கொண்ட நிலையில் அந்த அரண்மனைக்குள் நடக்கும் விருந்தில் அவர்கள் ஆடுவதாய் இருக்கும். கிட்டத்தட்ட அந்தப் பாடலும் இந்தப் பாடலும் மேக்கிங், வரிகள், செட், ஆட்டம் என பல வகைகளில் ஒத்துப் போகின்றன.
என்னதான் அரபிக் குத்து! என்று பொத்தாம் பொதுவாக போட்டு ஒரு வித மேனியாவை கிளப்பி விட்டிருந்தாலும் பீட்டுக்கு வார்த்தைகளை எழுதியிருக்கும் சிவகார்த்தி, தனது இஷ்டத்துக்கு வார்த்தைகளில் விளையாடியுள்ளார். அடிப்பொலி! என்று ஆன் தி வேயில் மலையாள வார்த்தையையும் போட்டுத் தாக்கியுள்ளார். எந்த லாஜிக்கும் இல்லாமல் வார்த்தைகள் வந்து விழுந்திருந்தாலும் கூட அவை காட்சியாக பார்க்கையில் கலர்ஃபுல்லாக கவனம் ஈர்க்கின்றன.
ஆனால் ஒட்டுமொத்த பாட்டையும் தூக்கி நிறுத்துவது தளபதி விஜய் தான். நரைத்த தாடி, இரும்பாய் இறுகிய உடல் என்று சாக்லேட் பாய் லுக்கில் இருந்து வெகுதூரம் தள்ளிப் போய்விட்டது போல் தோன்றியிருந்த தளபதி, இந்த பீஸ்ட் பாடலின், ஃபாஸ்ட் பீட்டுக்கு செம்ம ஃபாஸ்டாக ஆடி, தனது கம்பேக்கை நிரூபித்துள்ளார். புரியலேன்னாலும் மனசு பாடுது பித்தாதே பித்தாதே! என்று….
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.