பிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..!

By Thiraviaraj RMFirst Published Oct 22, 2019, 4:30 PM IST
Highlights

பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டுமென விரும்பி அவரது நற்பணி இயக்க நிர்வாகிகள் என்னை அணுகினர்.

தீபாவளிப் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பிகில் திரைப்படத்தை முன்னிட்டு , கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக  அரசு பள்ளிக்கு சிசிடிவி  கேமராக்களை அவரது ரசிகர்கள் வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து  திருநெல்வேலி துணை ஆணையர் சரவணன் தனது முகநூல் பக்கத்தில், ‘தீபாவளிப் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பிகில் திரைப்படத்தை முன்னிட்டு , கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டுமென விரும்பி அவரது நற்பணி இயக்க நிர்வாகிகள் என்னை அணுகினர்.

காவல்துறை ஆலோசனை ஏற்று நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர் அமைத்து கொடுத்தனர். அதன் இயக்கத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளியாகவுள்ள “பிகில்” படத்தை முன்னிட்டு , பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் பள்ளியில் உள்ளிட்ட 4 இடங்களில் மொத்தம் 12 CCTV அமைத்து கொடுத்தனர். https://t.co/grxsJPgeWZ pic.twitter.com/XxagMDmE1r

— Arjun Saravanan (@ArjunSaravanan5)

 

’பெண்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி அமைத்து கொடுத்த விஜய் நற்பணி இயக்கத்திற்கு நன்றி. நெல்லை விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றனர். சிசிடிவி மூலம் தேவையற்ற பிரட்சினைகள் குறைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியும். பெண் குழந்தைகள் எந்நேரத்திலும் காவல்துறை உதவி தேவைப்பட்டால் 1098 என்ற எண்ணை அழைக்கவும். உங்கள் பாதுகாப்பை சிசிடிவி உறுதி செய்வது போல உங்கள பெற்றோர் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டாயம் ஹெல்மட் அணிந்து வாகனத்தை ஓட்ட வலியுறுத்துங்கள்’’என அறிவுறுத்தியுள்ளார். 

click me!