
பாலிவுட், டோலிவுட்,ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் பலருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால் நம் தமிழக சினிமா ரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளுக்காக போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது உள்பட பலவிதங்களில் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.
ஒருசிலர் அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் கோவில் கட்டி வழிபடுவதும் உண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை குஷ்புவுக்கு மதுரையில் ரசிகர்கள் கோவில் கட்டினர். அந்த கோவிலை இன்று வரை ஒரு ரசிகர் முழு நேரமும் கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நடிகர் விஜய்க்கு சிலை வைத்து அதற்கு தீபாராதனை, பிரார்த்தனை ஆகியவைகளை செய்து வரும் ரசிகர்கள் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், விஜய்யின் சிலைக்கு முன் பூ மாலை வைத்து வணங்கி பின்னர் தாங்கள் அணிந்து கொண்டு வருகின்றார்களாம்.
அதுமட்டுமின்றி கடவுளே விஜய், பைரவா விஜய், என்பதை மந்திரம் போல் சிலைமுன்பு நின்று கூறியவாறு பிரார்த்தனை செய்தும் வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.