அப்பா, அம்மா இல்லாத எனக்கு விஜய் தான் எல்லாமே... லியோ FDFS-வில் காதலியை கரம்பிடித்த விஜய் ரசிகர் நெகிழ்ச்சி

By Ganesh A  |  First Published Oct 19, 2023, 10:57 AM IST

லியோ படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் தியேட்டரிலேயே தன் காதலிக்கு மோதரம் அணிவித்து திருமண நிச்சயம் செய்துகொண்டார்.


நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு ரிலீஸ் ஆனது. அப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றன. புதுக்கோட்டையில் லியோ படம் ரிலீசான தியேட்டரில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது. நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், தியேட்டரில் வைத்து தனது காதலியை கரம்பிடித்து உள்ளார். இருவரும் தியேட்டரில் மோதரம் மாற்றி திருமணம் நிச்சயம் செய்துகொண்டனர்.

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான புதுக்கோட்டை சேர்ந்த வெங்கடேஷ், மஞ்சுளா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த ஜோடி தான் இன்று லியோ முதல் காட்சியின் போது திருமண நிச்சயம் செய்துகொண்டனர். இதுகுறித்து பேசிய வெங்கடேஷ், தனக்கு தாய், தந்தை இருவருமே கிடையாது, விஜய் தான் தனக்கு எல்லாமே. அதனால் தான் அவர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க மாவட்டத்தலைவர் முன்னிலையில் இந்த திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. லியோ படத்தின் போது தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தான் 8 மாதமாக காத்திருந்து இன்று நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும், நாளை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் விஜய்யின் தீவிர ரசிகரான வெங்கடேஷ் கூறினார். 

நடிகர் விஜய் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த முறைப்படி இன்று மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், நாளை பெருமாள் கோவிலில் தங்களது திருமணம் நடைபெறும் என்றும் வெங்கடேஷ் தெரிவித்தார். லியோ படம் ரிலீசான தியேட்டரில் திருமண நிச்சயம் செய்துகொண்ட வெங்கடேஷ் - மஞ்சுளா ஜோடிக்கு அங்கு படம் பார்க்க வந்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இதையும் படியுங்கள்... கீர்த்தி சுரேஷ் முதல் கார்த்திக் சுப்புராஜ் வரை; விஜய்யின் வெறித்தனமான ரசிகர்களாக லியோ FDFS பார்த்த பிரபலங்கள்

click me!