
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான 'சர்கார்' திரைப்படத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் வந்தாலும், அனைத்தையும் கடந்து விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஆனால் ஒரு தரப்பினர் எதிர்ப்பார்த்த அளவிற்கு 'சர்கார்' திரைப்படம் வசூல் செய்ய வில்லை என்றும் லாபத்தை கூட ஈட்ட வில்லை என கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் 'சர்கார்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தன்னுடைய அடுத்தப்படத்தை முடிவு செய்துவிட்டார் விஜய். அடுத்ததாக 'ஏஜிஎஸ்' என்டர்டெயின்மென்ட்' பேனரில் அட்லீ இயக்கும் படத்தில் நடிப்பதையும் உறுதி செய்துள்ளார்.
ர்கார் படத்தை முடித்த சில வாரங்களில் தனது அடுத்த பட வேலைகளை துவங்கி விட்டதால் இன்னும் இந்த படத்திற்கு பெயரிடப்படவில்லை. எனவே தளபதி - 63 என குறிப்பிடப்படும் இந்த படத்தின் பூஜை, சென்னை மையிலாப்பூரிலுள்ள கோயிலில் எளிமையாக நடைபெற்றது. இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீபாவளிக்கு சர்கார் படத்தை கொடுத்த விஜய் தனது அடுத்தப்படத்தை அடுத்த வருட தீபாவளிக்குத்தான் கொடுக்கிறார். இதன் மூலம் இனிமேல் ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு விஜய் வந்திருப்பதாக தெரிகிறது. இதனால் விஜயிடம் இருந்து 6 மாதத்திற்காவது ஒரு திரைப்படம் வெளியாகும் என்று எதிர் பார்த்த விஜய் ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
படத்தில் நடித்த நேரம் போக எஞ்சிய நேரங்களில் தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கான பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளாராம் விஜய். மேலும் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கும் திட்டமும் உள்ளதாக விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.