
ஆகஸ்ட் 15ம் தேதியை அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதியாக அறிவித்துவிட்டு, பின்னர் ஒரு வாரம் முன்னதாக ஆகஸ்ட் 8ம் தேதியே ரிலீஸான அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’யின் அதே செண்டிமெண்டைப் பற்றிக்கொண்டு விஜய்யின் ‘ப்கில்’படமும் சொன்ன தேதிக்கு, அதாவது தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்பே ரிலீஸாகவிருப்பதாக விநியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இதில் விஜய் தன் படப்பிடிப்பு பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இந்த மாதத்துக்குள் அந்தப் பணிகளையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த படம் தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதுவரை பர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடலை மட்டும் ‘பிகில்’ படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் ‘வெறித்தனம்‘ என்ற பாடலை வெளியிடலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது. செப்டம்பரில் டீசரை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம் அக்டோபர் 24ந் தேதியே, அதாவது தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்பாகவே திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் தீபாவளி அக்டோபர் 27ம் தேதி ஞாயிறன்று வருகிறது. அக்டோபர் 24ந்தேதி வியாழக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக வரும் 3 நாட்கள் விடுமுறையை கருத்தில் கொண்டு இந்த முடிவை படக்குழு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ஆகஸ்ட் 15 ரிலீஸ் என்பதாக அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் முன்கூட்டியே ரிலீஸாகி செம ஹிட்டடித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.