விஸ்வாசத்தை ஊதித்தள்ளிய "பிகில்"... துள்ளி குதிக்கும் தளபதி ரசிகர்கள்... டரியலில் தல அஜித் ஃபேன்ஸ்...!

Published : Nov 19, 2019, 12:21 PM IST
விஸ்வாசத்தை ஊதித்தள்ளிய "பிகில்"... துள்ளி குதிக்கும் தளபதி ரசிகர்கள்... டரியலில் தல அஜித் ஃபேன்ஸ்...!

சுருக்கம்

4வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "பிகில்" திரைப்படம், பொங்கல் ட்ரீட்டாக திரைக்கு வந்த அஜித்தின் விஸ்வாசம் பட வசூலை முறியடித்து வெறித்தனம் காட்டியுள்ளது. 

தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்த "பிகில்" திரைப்படம், ரசிகர்களின் பிரம்மாண்ட ஆதரவால் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. அட்லீ - விஜய் கூட்டணியில் வெளியான 3வது படம் "பிகில்". இதில் நயன்தாரா, ஆனந்தராஜ், யோகிபாபு, ஜாக்கி ஷெஃராப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த போதும், விஜய்யின் மாஸ் வசூலில் அதிரடி காட்டியுள்ளது. 24வது நாளாக உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் "பிகில்" திரைப்படம் இதுவரை 296.90 கோடி வரை வசூல் செய்து கெத்து காட்டி வருகிறது. இந்தியாவில் மட்டும் "பிகில்" திரைப்படம் 205 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

4வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "பிகில்" திரைப்படம், பொங்கல் ட்ரீட்டாக திரைக்கு வந்த அஜித்தின் விஸ்வாசம் பட வசூலை முறியடித்து வெறித்தனம் காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் "பிகில்" திரைப்படம் இதுவரை 141.05 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் விஸ்வாசம் படம் 140 கோடி மட்டுமே வசூல் செய்த நிலையில், பிகில் திரைப்படம் அந்த வசூலை தட்டித் தூக்கியுள்ளது. 

தென்னிந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ள "பிகில்" திரைப்படம். கேரளாவில் அதிக வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் தான் கேரளாவில் இறுதியாக அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?