இது ஒரு குத்தமா..? உண்மை தெரியாமல் நடிகரோடு சேர்த்து பேசி 'டிடி'யை ஓவரா போட்டு தாக்கிய சம்பவம்..! நடந்தது இது தான்..!

Published : Nov 19, 2019, 11:56 AM IST
இது ஒரு குத்தமா..? உண்மை தெரியாமல் நடிகரோடு சேர்த்து பேசி 'டிடி'யை ஓவரா போட்டு தாக்கிய சம்பவம்..! நடந்தது இது தான்..!

சுருக்கம்

சின்னத்திரையை பொறுத்தவரை, ஒரு நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி என்று பெயர் எடுத்துள்ளவர் திவ்யா தர்ஷினி. இவருக்கு, பல பிரபலங்கள் கூட தீவிர ரசிகர்கள். பல முறை அதை, பொது மேடையில் கூட சிலர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இவர் எந்த அளவிற்கு பிரபலமோ... அதே அளவிற்கு இவரை சுற்றி பல சர்ச்சைகளும் உள்ளது. சமீபத்தில் கூட, டிடியின் கணவர் ஸ்ரீகாந்த் தன்னுடைய மனைவி டிடியிடம் இருந்து விவாகரத்தை பெற முக்கிய காரணம், அதிகம் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வதால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதை தொடர்ந்து பிரபல நாளிதழ் ஒன்று டிடி, பாகுபலி நடிகர் ராணாவுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு நடனமாடியதாக ஒரு செய்தியை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில், டிடி நடிகர் ராணாவுடன்... ஹைதராபாத்தில் நடந்த லீக் போட்டியை, கண்டு கழித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ராணா ஒரு ஜென்டில் மேன் என்றும் அவர் ஒரு சிறந்த நண்பர் மற்றும், சகோதரர் என கூறியுள்ளார். 

விளையாட்டு போட்டியை பார்த்தது ஒரு குத்தமான்னு தெரியல... பாவம் ஆ..ஊனா... டிடியை பற்றி கொளுத்தி போடுவதையை சிலர் வேலையாக செய்து வருகின்றனர் என கூறி வருகிறார்களாம் இந்த உண்மையை அறிந்தவர்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?