"தளபதி 65" படத்திற்கு அந்த இயக்குநர் பெயரை டிக் அடித்த விஜய்... ஜாக்பாட் அடித்த இயக்குநர் யார் தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Dec 16, 2019, 12:08 PM IST
Highlights

அப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், "தளபதி 65" குறித்த தகவல்கள் உலா வர ஆரம்பித்துள்ளன. 

"பிகில்" பட வெற்றிக்குப் பிறகு, கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 64" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். சென்னை, டெல்லி என 3 கட்ட ஷூட்டிங்கை நிறைவு செய்த படக்குழு, தற்போது கர்நாடகாவில் 4ம் கட்ட படப்பிடிப்பை நடத்திவருகிறது. 

சிவமோகாவில் உள்ள பழைய சிறைச்சாலையில்  பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு தான் விஜய், விஜய்சேதுபதி இடையேயான சண்டை காட்சிகளும், முக்கிய காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், "தளபதி 65" குறித்த தகவல்கள் உலா வர ஆரம்பித்துள்ளன. 

அதன்படி, "தளபதி 65" படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்த "அசுரன்" படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கியதோடு, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் ஸ்டார் ஷாரூக்கான் விருப்பம் தெரிவித்தார். அதேபோல தெலுங்கு ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் போட்டி போட்டு வந்தனர். 

இதனிடையே, "அசுரன்" பட வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்க வேண்டுமென விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் "அசுரன்" படத்தில் பணியாற்றிய டெக்னிஷியன்கள் தான் "தளபதி 65" படத்திலும் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!