
விஜய் ஜோதிகா நடித்து 2000 ஆம் ஆண்டு வெளிவந்த குஷி மற்றும் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திருமலை ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்.
இன்று வரை ரசிகர்கள் இந்த படங்களை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இளைய தளபதி விஜய் பைரவா படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என அதிகார பூர்வமாக தகவல் வெளிவந்துள்ளது.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா அல்லது காஜல் நடிப்பதாக கூறப்படுகின்றது.
இதில் சமந்தா கமிட் ஆகிவிட்டார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துவரும் நிலையில் .
தற்போது இப்படத்தில் ஒரு பவர்புல் பெண் கதாபாத்திரம் இருக்கிறதாம். இதற்காக நடிகை ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.
ஒருவேளை இந்த படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க ஓகே சொல்லிட்டால் 13 வருடத்திற்கு பிறகு விஜய் - ஜோதிகா இணையும் படமாக இது இருக்கும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.