சஞ்சய் ராமசாமியுடன் சசிகலாவை சந்தித்த ஸ்ரீதேவி

First Published Dec 27, 2016, 1:12 PM IST
Highlights


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொழிலதிபர்கள், அதிமுக நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், சினிமாக்காரர்கள் என தொடர்ந்து சின்னம்மா சசிகலாவை நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறி புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

இதில் உண்மையிலேயே ஆறுதல் கூறுபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், “இதுதான் நமக்கு கிடைச்ச சான்ஸ்” என நட்பை பலப்படுத்தி கொள்ளவும் பலர் தேடி ஓடி செல்கின்றனர்.

அதில், நடிகை ஸ்ரீதேவி, உண்மையிலேயே ஆறுதல் கூறுவதற்காக வந்திருந்தார். போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், சின்னம்மா சசிகலாவை சந்தித்து, ஆறுதல் கூறினார்.

தான் குழந்தையாக இருந்தபோது “முருகன் வேடத்தில் நடித்த்தாகவும், அப்போது, ஜெயலலிதா பார்வைதியாக நடித்ததாகவும், அந்த நேரத்தில் அவரது மடியில் பல மணிநேரம் தான் அமர்ந்து இருந்ததாகவும்” ஸ்ரீதேவி தன் பழைய நினைவுகளை சசிகலாவிடம் பகிர்ந்து கொண்டார். மேலும், “நம்நாடு படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுடன் நடித்ததாகவும்” கூறியுள்ளார்.

ஸ்ரீதேவி, சசிகலா உடனான சந்திப்பின்போது, அருகில் ஒருவர் கும்பிட்டபடி நிற்பார். அவர் யார் என்ற கேள்வி அனைவருக்கும் எழும்…?

அவர்தான் “சஞ்சய் ராமசாமி“!…

சஞ்சய் ராமசாமி, ஸ்ரீதேவியின் சொந்த தங்கை லதாவின் கணவர். முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் ராமசாமியின் மகன் ஆவார். மேலும், சஞ்சய் ராமசாமி, 91 முதல் 96ம் ஆண்டு வரை, ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார்.

இவரது பெயரை அடிப்படையாக கொண்டு, ‘கஜினி’ படத்தில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யாவின் கேரக்டருக்கு ‘சஞ்சய் ராமசாமி’ என பெயர் வைத்திருப்பார்.

click me!