
ரசிகர்களை பொருத்தவரையில் விஜய்யாக இருந்தாலும் அஜித்தாக இருந்தாலும் எப்படி கொண்டாடி வருகின்றனரோ அதேபோல் அவர்களுடைய பிள்ளைகளைப் பற்றி எந்த ஒரு தகவல் வெளிவந்தாலும் அவர்களுக்கு ஸ்பெஷல் தான்.
இந்நிலையில் ஏற்கனவே நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் 'வேட்டைக்காரன்' படத்தில் இன்ட்ரோ பாடலுக்கு தந்தை விஜயுடன் நடனமாடி விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இதனையடுத்து தெரி படத்தில் விஜயின் மகள் திவ்யாவும் ஒரு காட்சியில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயின் மகன் சஞ்சய் சிறுவயதில் எப்படி இருப்பார் என பல புகைப்படங்கள் வெளியானது. ஆனால் இப்போது எப்படி இருப்பார் என யாரும் பார்த்தது இல்லை.
இவர்களது பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் மகள் திவ்யாவின் டென்னிஸ் விளையாடும் போது நடிகர் விஜய் பெற்றோர்கள் பார்வையாளர்கள் இருக்கையில் கடைசியாக அமர்ந்து ரசிக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
அதேபோல விஜயின் மகன் சஞ்சய்யின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதில் அவர் நல்ல உயரமாகவும், அசப்பில் விஜய் போலவும் உள்ளார். இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.