மாஸான லுக்கில் விஜய்! – லீக் ஆனா புகைப்படம் சமூக வலைதளங்களில் செம்ம வைரல்!

 
Published : Mar 03, 2018, 10:26 AM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
மாஸான லுக்கில் விஜய்! – லீக் ஆனா புகைப்படம் சமூக வலைதளங்களில் செம்ம வைரல்!

சுருக்கம்

Thalapathy Vijay sporting a debonair look for ARMurugadoss Thalapathy62

விஜய் மற்றும் முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் சூட்டிங் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி படத்திற்கு பூஜை போடப்பட்டது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

முதல் கட்டமாக சென்னையிலும் இரண்டாம் கட்டமாக கொல்கத்தாவிலும் சூட்டிங் நடந்தது. இதில் சென்னையில் சூட்டிங் நடந்த போது, படத்தில் படகுகள் வைக்கப்பட்டு செட் போடப்பட்ட போட்டோக்கள் லீக் ஆனது. இதற்கு முன்னர் படத்தின் போட்டோசூட் நடந்த போது விஜய் புகைபிடித்தது போன்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. இதனையடுத்து  இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வந்து, சமீபத்தில் நிறைவடைந்தது.

அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கொல்கத்தாவில் சூட்டிங் நடந்த போது ஒரு சண்டை காட்சியின் சில நொடி வீடியோ லீக் ஆனது. இதையடுத்து தரமணியில் நடைபெற்றது. தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. இதில் புகைப்படத்தில் ஸ்டைலிசான விஜய்யை பார்க்க முடிகிறது.

அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இங்கும் விஜயின் ஒரு போட்டோ லீக் ஆகி உள்ளது. இதில் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் தாடி வைத்தது போல் கோட் சூட் போட்டு மாஸாக உள்ளார்.

மேலும், ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை அதிகமாக பகிரப்பட்டு டிரெண்டாக்கி உள்ளனர். ஏற்கனவே இந்தப் படத்தின் போட்டோ ஷூட்டிங்கின் போது புகைப்படங்கள் வெளியானது. தற்போது இந்தப் புகைப்படங்களும் வெளியாகி இருப்பதால், படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!
9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!