
ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிரச்சியில் ஆழ வைத்த ஒரு நிகழ்வு நடிகை ஸ்ரீதேவியின் மரணம்தான்.
திருமணம்
ஒரு திருமண நிகழ்வுக்காக தனது மகள் மற்றும் கணவருடன் துபாய் சென்றிருந்தார் நடிகை ஸ்ரீதேவி.திருமணம் முடிந்து மகள் மற்றும் கணவர் போனி கபூர் மும்பை திரும்பி வந்து விட்டனர். ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள நட்சத்திர விடுதியில் ஷாப்பிங்காக தங்கியிருந்தார்.
அதிர்ச்சி
இந்நிலையில் மும்பை சென்றிருந்த போனி கபூர் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக துபாய் வந்தார். இரவு உணவுக்கு வெளியில் செல்லலாம் என்று கணவர் கூறியதால், ரெடியாகி விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு குளியலறை சென்ற ஸ்ரீதேவி மீண்டும் வரவே இல்லை.உள்ளே சென்று பார்த்த போனி கபூருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.ஆம் மூர்ச்சையாகி கிடந்த ஸ்ரீதேவி பார்த்து செய்வதறியாது திகைத்த போனி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
விபத்து
ஆனால் அவர் முன்பே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர் மருத்துவர்கள்.முதலில் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்டது.துபாய் நாட்டு சட்டப்படி உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.அதில் குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் இது ஒரு விபத்து என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
தகனம்
72 மணிநேர நேரத்திற்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டு மும்பை கொண்டு வரப்பட்டு நேற்றுமுன்தினம் அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
வைரல்
இதையொட்டி எங்கு பார்த்தாலும் ஸ்ரீதேவியின் பேச்சுகள்தான்.இந்த நிலையில் ஸ்ரீதேவி கடைசியாக நடித்த விளம்பர படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.