
விஜய் - அஜித் ரசிகர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில், ஒருவரை கத்தியால் குத்திய சம்பவத்தில் , போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் அருகே, இலங்கை அகதிகள் முகாமில், நடிகர் அஜித் மற்றும் விஜய்யின் ரசிகர்களுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ட்விட்டரில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
எனவே இரு தரப்பு ரசிகர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டம் புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பிரச்சனை பெரிதாக வெடித்துள்ளது.
இந்த பிரச்சனையில் வாக்கு வாதமாக இருந்த சண்டை , கைகலப்பாக மாறி, கத்தி குத்து வரை சென்றது. விஜய் ரசிகர் ரோஷன் என்பவர், அஜித் ரசிகர் உதய சங்கரை கத்தியால் குத்தினார். இவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஸ்டான்லி, மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உதயஷங்கரை கத்தியால் குத்திய, ரோஷனை போலீசார் கைது செய்துள்ளனர். அஜித் - விஜய் ரசிகர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கத்தி குத்து வரை சென்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.