நம்பர் 1 மாஸ் நடிகர்! விஜய், அஜித், சூர்யாவை தூக்கி அடித்த சிவகார்த்திகேயன்! எப்டினு தெரியுமா?

Published : Jan 12, 2019, 10:09 AM IST
நம்பர் 1 மாஸ் நடிகர்! விஜய், அஜித், சூர்யாவை தூக்கி அடித்த சிவகார்த்திகேயன்! எப்டினு தெரியுமா?

சுருக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான சீமராஜா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் பேமிலி ஆடியன்ஸ் இந்த படத்தை விரும்பி பார்த்தனர். இதனால் சுமார் 50 கோடி ரூபாய் வரை சீமராஜா வசூலித்தது. இந்த படத்தை கடந்த ஜனவரி 1-ம் தேதியன்று சன் டிவி மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பியது. 

ரசிகர்கள் மட்டும் இன்றி குடும்ப ஆடியன்ஸ்கள் மத்தியில் ஒரு நடிகருக்கு இருக்கும் மாஸ் தான் அவரை முன்னணி ஹீரோவாக்குகிறது. எம்.ஜி.ஆர்., ரஜினி., விஜய், அஜித் ஆகியோர் மாஸ் ஹீரோக்களாக வளர்ந்ததற்கு காரணம் தனக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது மட்டும் அல்ல. குடும்ப ஆடியன்சையும் இவர்கள் கவர்ந்து வைத்திருந்தனர். 

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பும் நடிகர் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருவது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ஆர், ரஜினியை தொடர்ந்து தற்போது விஜய், அஜித் மாஸ் ஹீரோக்களாக உள்ளனர். விஜய், அஜித் ஆகியோரின் திரைப்படங்கள் எப்போது வெளியானாலும் அவர்களுக்கு என்று தனி மார்க்கெட் உண்டு. முதல் நாளில் இவர்கள் இருவரின் திரைப்படும் வசூலிக்கும் தொகையை தற்போதுள்ள நடிகர்களின் எந்த படத்தாலும் வசூலிக்க முடியாது. சூர்யா, விக்ரம் போன்றோர் கூட விஜய், அஜித்திற்கு பின்னால் தான். தியேட்டர் வசூல் ஒருபுறம் இருக்க தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படத்தின் டி.ஆர்.பியும் கூட ஒரு ஹீரோவை மாஸ் ஹீரோவாக முன்னிலைப்படுத்தும்.

 

அந்த வகையில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் திரைப்படங்கள் டிவியில் எப்போது ஒளிபரப்பானாலும் அதனை பார்ப்பதற்கு என்று தனியாக ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் நடித்த படம் முதன்முறையாக டிவியில் ஒளிபரப்பாகும் போது கிடைக்கும் டி.ஆர்.பி தான் அவர்கள் படத்தின் சாட்டிலைட் உரிமைக்கான தொகையை நிர்ணயிக்கும். இந்த விஷயத்தில் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்க்கு சூர்யா எப்போதுமே டஃப் கொடுப்பார்.

திரையரங்கில் ஓரளவிற்கு சுமாராக ஓடும் சூர்யாவின் படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் போது டி.ஆர்.பியை கொட்டிக் கொடுக்கும். அந்த வகையில் சூர்யா நடித்து வெளியான சிங்கம் 3 திரைப்படத்தின் டி.ஆர்.பி தான் இதுநாள் வரை தமிழ் சேனல்களில் ஒரு படம் பெற்ற அதிக டி.ஆர்.பியாக இருந்தது. ஆனால் அந்த டி.ஆர்.பியை தற்போது முறியடித்திருப்பது விஜய் படமோ, அஜித் படமோ இல்லை. மாறாக சிவகார்த்திகேயன் படம்.

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான சீமராஜா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் பேமிலி ஆடியன்ஸ் இந்த படத்தை விரும்பி பார்த்தனர். இதனால் சுமார் 50 கோடி ரூபாய் வரை சீமராஜா வசூலித்தது. இந்த படத்தை கடந்த ஜனவரி 1-ம் தேதியன்று சன் டிவி மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பியது. அதாவது ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக சீமராஜ சன்.டிவி.யில் ஒளிபரப்பானது.

 

அந்த வகையில் சீமராஜா திரைப்படம் சுமார் 21 டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று கடந்த வாரம் இந்திய அளவில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட திரைப்படமாக உருவெடுத்துள்ளது. இந்த அளவிற்கு இந்திப்படம் கூட கடந்த வாரம் டி.ஆர்.பியை பெறவில்லை. மேலும் சூர்யாவின் சிங்கம் 3 திரைப்படம் பெற்று இருந்த 20 என்கிற டி.ஆர்.பி அளவை சிவகார்த்திகேயனின் சீமராஜா முந்தியுள்ளது. மேலும் விஜயின் மெர்சல், அஜித்தின் வீரம் படங்களையும் சீமராஜா காலி செய்துள்ளது. இதன் மூலம் விஜய், அஜித்திற்கு போட்டியாளராக மட்டும் இல்லாமல் அவர்களை தோற்கடித்த ஒரு நடிகராகவும் சிவகார்த்திகேயன் வளர்ந்து நிற்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?